சமீபத்தில் திரைப்பட இயக்குனர்,மற்றும் குணச்சித்திர நடிகரும்,'நாம் தமிழர்' இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான சீமான் & ஜெயா குழுமத் தொலைகாட்சிக்காக நேர்காணல் நடத்துனர் ராபிபெர்னாட்டுக்கு சிறப்பு நேர்காணல் அளித்திருந்தார்.
தலையின் பேன் கடித்தால்கூட அனுமதி பெற்றுதான் சொரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்றும்,சம்பளம் போதவில்லை என்றும் தான் ரபிபெர்னாட் தன் பணி இருப்பிடத்தை மாற்றினார்.நிலா தொலைகாட்சியின் பங்குதாரராகி கையைச் சுட்டுக்கொண்டார்.இவரை மிகுந்த நேர்மையாளர் என்றும்,ஈழ அரசியலில் விசாலப் பார்வை கொண்டவர் என்ற நினைப்பிலுமே தோழர் சீமான் அவருக்கு நேர்காணல் அளித்திருப்பார் என்று நம்புவோமாக!
ரபிபெர்நாட் ஒரு சந்தர்ப்பவாதி.வருமானம் வருகிறது என்றால் அவரது நாக்கு எதையும் கேட்கும்,பேசும்!அவர் சன் தொலைக்காட்சியில் முதல்முறையாக வேலை பார்த்தபோது,வரிசையாக தி.மு.க.வின் அல்லது பகுத்தறிவின் எதிர்த்தரப்பினரைக் கேள்விகள் கேட்டு துளைத்தெடுப்பதில் பிரபலமானவர்..இருப்பினும் வயிறு பெருத்தது..தொந்தி பெருத்தது..பசி அதிகமாயிற்று..எங்கே போனால் வயிறார சோறு கிடைக்கும் என்றே அலையும் ஒரு நாடோடியைப்போல அலைந்த ரபிபெர்னாட்டிற்கு ஜெயலலிதா அம்மையாரின் அன்னதானத் திட்டம் மனம் குளிரச் செய்துவிட்டது போலும்!அதனாலேயே ஜெயா தொலைகாட்சி குழுமத்தில் தஞ்சமடைந்து இன்றளவும் பசியறியாமல் தன் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.அப்படிப்பட்ட பிரகஸ்பதியான ரபிபெர்னாட்டை ஒரு பெரிய அறிவாளி என்றோ,ஈழப் போராளிகளின் அபிமானி என்றோ..தவறான கணிப்புக்கு வந்ததன் விளைவாகவே தோழர் சீமான் மேற்படியாளருக்கு நேர்காணல் உரையாடலளிக்க சம்மதித்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது.
அவ்வுரையாடலில் சீமான்,தன்னுடைய மிகப் பெரிய ஐயப்பாடாகவும் விடை தெரிய வேண்டுமென்ற எண்ணத்திலும் தமிழ்நாட்டு முதல்வரை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.இறையாண்மை அதாவது, இந்திய இறையாண்மை என்றால் என்ன? அதுபற்றி தனக்கொன்றும் தெரியவில்லை என்றும்,முதல்வர் இக்கேள்விக்கு விளக்கமான பதிலைச் சொல்ல வேண்டுமென உரையாடியிருக்கிறார்.இதற்க்கு முதல்வர் அளவிலான பெரிய மனிதர்கள் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமே இல்லை,தனிப்பட்ட முறையில் முறையில் ரபிபெர்னாட்டிடம் கேட்டிருந்தால்கூட சொல்லியிருப்பார்.
ஒரு தாய் தன் மகனைப் பார்த்து இன்னார்தான் உன் தகப்பன் என அடியாளம் காட்டும்போது,அத்தாயிடம் குறுக்குக் கேள்விகளேதும் கேட்காமல் அவள் சொல்வதை அப்படியே நம்பி அடையாளப்படுத்தப்பட்ட நபரை தன தந்தையாக அவரை ஏற்றுக் கொண்டு நேசிப்பதுதான் இறையாண்மை என்பது.வீடும் தேசமும் ஒன்றுதான்.அவ்வகையில் தேசத்தின் வார்த்தைகளை நம்ப வேண்டும்.இதுதான் தேசிய இறையாண்மை.தேசத்தின் வார்த்தைகள் என்றால் என்ன?நாட்டை எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள்,நாட்டுக்கான பாதுகாப்பு கட்டுமானங்கள்,நாடு சிதறுண்டு போகாமலிருக்க உள்நாட்டுக் கட்டுப்பாடுகள் என்றெல்லாம் சில கூறுகளை உள்ளடக்கிய சட்டங்கள் செயல்படுத்த தேசத்தை தேசத்தை ஆளும் தலைவர்கள்.முனையும்போது அதற்குப் பூரண ஒத்துழைப்பு நல்குவதே தேசிய இறையாண்மை எனக் கருதப்படுகிறது.ஆக...இதைப் படிக்கும் தோழர் சீமானுக்கு இறையாண்மை பற்றிய ஐயம் நீங்கியிருக்கும் என்று நம்புவோம்.
அடுத்து..அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது செல்லாது என்றும்,சிறைப்படுத்தியது தவறு என்றும் நீதிமன்றம் சொல்லிவிட்டதாம்! அதனால் தன்னைக் கைது செய்ததற்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்லியே தீரவேண்டுமென்று கொக்கரிக்கிறார் சீமான்.சீமான் போன்ற கால்வேக்காட்டு அரசியல்வாதிகள் இன்னும் நிறைய கற்றுத் தேறவேண்டும்..பக்குவப்படவேண்டும்..அனுபவப்படவேண்டும்.
நமது இந்திய பீனல் கோர்ட் சட்ட நடைமுறையும்,வழக்காடுதலும்,தீர்ப்புமுறைகளும்,திறமையாக வாதாடுதல்,வெற்றிபெறுதல் என்றக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன.அடர்க்குக் காரணம்,ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதிக்கூட தண்டிக்கப்படக்கூடாது,என்ற உயரிய கொள்கையேயாகும்.அவ்வகையில் சீமான் போன்ற எத்தனயோ குற்றவாளிகள் தப்பியிருக்கலாம்...அதற்க்கெல்லாம் நொட்டாங்கு பேசிக்கொண்டிருக்கக் கூடாது.இயக்குனர் தங்கர்பச்சான் முதல்வரைச் சந்தித்து பேசி சீமானுக்காக பரிந்து பேசினார்..முதல்வரும் மனமிரங்கினார்.அதன் பின்னரே அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அழுத்தமான வாதங்கள் வைப்பதை நிறுத்திகொண்டனர்.எனவே சீமான் வெளியே வந்துவிட்டார்.அவ்வளவுதான்.தங்கர்பச்சானை சிறைக்கு அழைத்து சந்தித்து,முதல்வரை சந்தித்துப் பேசுங்கள் எனச் சொல்லிவிட்டு,அவர் முதல்வரை சந்தித்து விட்டார்...முதல்வரும் விடுதலைக்கு சம்மதித்துவிட்டார் எனத் தெரிந்ததும் உள்ளுக்குள் மகிழ்ந்தபடியே சும்மனாங்காட்டியும் வெளிப்பூச்சாக தங்கரைக் கண்டித்து கடித நாடகம் ஆடியவர்தானே சீமான்.

சிரிப்புதான் வருகிறது...சீமானை மாதிரி எத்தனை அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறது தமிழகம்!
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இதே இறையான்மை பிரச்சினை காரணமாக வைகோ உள்ளிட்ட எட்டுபேரை பொடா சட்டத்தில் கைது செய்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார்.அப்போ சீமான் என்ன புட்டிபால் குடித்துக்கொண்டிருந்தாரா...? பொடா கைதை எதிர்த்துப் பேச அன்று கலைஞரைத் தவிர ஒரு நாதியும் இல்லையே..ஒரு ஐந்தாண்டு மாற்றத்திற்குப் பின் குறுகிய காலத்தில் அரசியல் அறிவும்,ஆர்வமும் சீமானுக்கு எப்படி வந்தது..?ஏன் வந்தது..?
கலைஞர் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் தற்காலிகமாக இலங்கை ஈழத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாளில் தமிழக அரசு சொன்னது.அப்போது சீமான் கலைஞரால்தான் போர் நிறுத்தம் அறிவித்தேன் என ராஜபக்சே சொல்லட்டும்!அப்போதுதான் நம்புவோம் என்றார்.இவர் பிரபாகரனைச் சந்தித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.இப்பொழுது,தான் எழுதிக்கொண்டிருக்கிற பத்திரிக்கை தொடரில் மேதகு பிரபாகரனோடும்,மற்ற தலைவர்களோடும் அடிக்கடி அளவளாகி மகிழ்ந்ததாகி வேறு எழுதுகிறார்!ஆனால் பிரபாகரனைச் சந்தித்ததாக சொல்வது பொய்.சந்தித்தபோது எடுத்தப் படமாகக் காட்டுவது கிராபிக்ஸ் படம் என்று சொன்னால் அதற்க்கு சீமான் என்ன சொல்வார்?எப்படி நிரூபிப்பார்? "சீமான் என்னை வந்து சந்தித்தார்" என்று பிரபாகரன் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா..?அல்லது நடேசன் சொல்லியிருக்கிறாரா..? இவர்கள் அப்படி ஒன்றும் சொல்லாதபோது,சீமான் சொல்லுவதை மட்டும் எப்படி நம்புவது?ஆக...ஏதாவது சொல்லி தமிழ்மக்களை ,இளைஞர்களை ஏமாற்றி அவர்களின் மொழி இன உணர்வைத் தூண்டிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற பகல்கனவின் விளைவாகவே சீமான் போன்றவர்கள் திடீர் புலி ஆதரவு நிலைபாடு எடுத்து பிரபாகரனை சந்தித்ததாக கதையளந்து மக்களை ஏமாற்றித் திரிக்கின்றனர் என்றால் இதை மறுக்க,வலுவான ஆதாரமேதும் சீமானால் காட்ட முடியுமா..?
இவர் பிரபாகரனை சந்தித்தார் என்றால் எப்படி சந்தித்தார்..இலங்கைக்குப் போக விசா எப்போதுப் பெற்றார்.அது பெறவில்லை என்றால்..சென்றதும் உண்மை என்றால்..கள்ளத்தனமாக வெளிநாடு சென்றது குற்றமாகாதா?அதற்க்காகவுமல்லவா இவரைத் தூக்கி உள்ளே போட வேண்டும்.இவர் மீனவர்களுக்காக போராடுகிறாராம்!மீனவர்களுக்கு கடலில் எல்லை தெரியவில்லையாம்..மீனவர்களை யாராவது அடித்தால் இவர் திருப்பி அடிப்பாராம்..தமிழ்நாட்டு அரசாங்கத்தை வேசிமகன் அரசாங்கம் என்பாராம்.இப்படியெல்லாம் பேச சொல்லித்தான் பிரபாகரன் சொல்லிக் கொடுத்திருப்பாராக்கும்...
பிரபாகரன் ஒரு போராளி! விடுதலைப் போராளி!!விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை நிர்மாணித்து போர்க்களம் மட்டுமின்றி நிர்வாக ஆட்சியல் நடைமுறையிலும் அவ்வியிக்கத்தை நடைபோடவைத்தவர்.உலக ஆட்சியாளர்கள் அனைவரையும் அச்சத்துடனும்,நன்மைதிப்புடனும் தன்னை திரும்பி பார்க்க வைத்தவர்.இவ்விதம் ஒரு போராளித் தலிவராக வளர அவர் பிறந்த ஈழ மண்ணே பெரிய காரணம்.ஆனால்,சீமான் எஸ்.பி.மெய்யரசு போன்றோர் பிறந்து வளர்ந்தது இந்திய தமிழ் மண்ணில்.இங்கே முத்துவேலர் கருணாநிதி என்பவர் மாணவர் பருவத்திலேயே கையெழுத்திதழ் நடத்தினார்.பகுத்தறிவு பாதையை தேர்வு செய்தார்.திரைப்பட,நாடக கதை வசனம் எழுதினர்.அண்ணாவின் பின்னால் அணி சேர்ந்தார்,மாணவர்களை சேர்த்துக்கொண்டு தாய்மொழி காக்க இந்தியை எதிர்த்தார்,மனிதனை மனிதனே இழத்துச் சுமக்கும் கைரிக்ஷாவை ஒழித்தார்,இந்தியாவில் அனைத்து மாநில முதல்வர்களும் தங்களின் கரங்களால் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தார்,சிறந்த நிர்வாகி எனப் பெயரெடுத்தார்.இவ்விதம் முத்துவேலு கருணாநிதி பெயர் பெற இந்திய தமிழ்மண்ணே காரணம்.வேலுபிள்ளை பிரபாகரன் பாதை வேறு..முத்துவேலர் கருணாநிதி பாதை வேறு...இருவரையும் ஒப்பிட்டோ அல்லது ஆய்வு செய்தோ சீமான் போன்றவர்கள் குழப்பக் கொள்ளக் கூடாது. சமீபத்தில் அமெரிக்க இரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதளம் விடுதலைபுலிகள் விவகாரம் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி,கடந்த 2004ஆம் ஆண்டு சுமார் 4000 துருப்புகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய கர்ணாவை அப்போதைய சந்திரிகா அரசு பாதுகாப்புக் காரணத்திற்க்காக தமிழ்நாட்டிற்குதான் அனுப்பி வைத்தாராம்.அப்போது இங்கே முதல்வராய் இருந்தவர் ஜெயலலிதா அம்மையார்தான்.மேலும் சென்னை,நீலகிரி எஸ்டேட் போன்ற இடங்களில் கர்ணா அண்ட் கோ'வினர் மிகமிக பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.2006இல் ஜெயலிதா அம்மையார் ஆட்சி முடிவுற்று தி.மு.க.ஆட்சி தொடங்கிய பின்னர் இனிமேல் இங்கே சரிபட்டு வராதெனக் கருதி அவசர அவசரமாக இலங்கை திரும்பியிருக்கின்றனர் கர்ணாவும் அவர் சகாக்களும்.இதுதான் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய தகவல் பரிமாற்றத்தின் சுருக்கமான சாராம்சம்.விக்கிலீக்ஸ் செய்திகளை இதுவரை அமெரிக்கா அதிகாரபூர்வமாக மறுக்கவில்லை.ஆனால் ஹிலாரிகிளிண்டன் மூலமாக செய்திகளை மழுப்புவதும் சமாளிப்பதும் சமாதானம் செய்வதுமாகத்தான் இருக்கிறது அமெரிக்க நிர்வாகம்.
ஆக துரோகி கர்ணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது ஜெயலலிதா அம்மையார்! போர் நிகழ்ந்தால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள் என்றது ஜெயலலிதா அம்மையார்..!பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று சொன்னதும் ஜெயலலிதா அம்மையார்தான்!இந்த லட்சணத்தில் இங்கே இல்லை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசிய சீமானெல்லாம் ஒன்று கர்ணாவின் கூலியாளாக இருக்க வேண்டும்! அல்லது இந்திய மண்ணில் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென்ற அந்நிய உளவு நிறுவனம் ஏதேனுமொன்ரின் ஏஜென்ட்டாக இருக்க வேண்டும்!எனவே சீமான் போன்றவர்களை உளவுத்துறை கண்காணிப்பிலேயே வைத்திருப்பது அவசியம்.மற்றபடி ரபிபெர்னாட் போன்ற நேர்காணல் நடத்துனர்கள்...பாவம் கூலிக்கு மாரடிப்பவர்கள் விட்டுவிடுவோம்.