தனது அனல் மட்டுமல்ல அணுக்கள் தெறிக்கும் பேச்சினாலும் கழகத்தின் எதிரிகளையும்,அந்த எதிரிகளை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும்
இயக்கிவந்த பார்ப்பனர்களையும் எதிர்த்து குரல் கொடுத்து வந்த அன்பு மாமா
வெற்றிகொண்டான் காலமானார் என்ற செய்திகேட்டு..
சேகர்பாபு கழகத்தில் இணைந்த மகிழ்ச்சியையும் தாண்டிஅத்தனை சோகம் மனதிற்குள்.
பார்ப்பன வெறியர்களான ஜெயலலிதாவிற்கு எதிராகவும்,சங்கராசாரியர்களுக்கு எதிராகவும் தன்னுடைய கருத்துக்களை தனக்கே உரிய நையாண்டியோடும்,நகைச்சுவையோடும் எளிய மக்களுக்கு
கொண்டு சேர்த்ததில்அவர்க்கு இணை எவருமில்லை.கழக கூட்டங்களிலும்,எத்தனை பெரிய மாநாடு
என்றாலும் அந்த கூட்டங்களில் அரசியல் வரலாறுகளை நினைவு கூறுவது அவரது பேச்சுகளின் சிறப்பு.கலைஞர் அவர்கள் இந்திராகாந்தி,ராஜாஜி,காமராசர் மற்றும் அனைத்துலக தலைவர்களிடம் ஆடிய அரசியல் விளையாட்டுகளை மக்களிடத்திலே தன் வாழ்நாள் முழுதும் பரப்பியவர்.ஆக பல கூட்டங்களில் அவர் வெளிப்படுத்திவந்த தன் வாழ்நாள் ஆசையை இன்று இயற்கை நிவர்த்தி செய்தது.
No comments:
Post a Comment