Tuesday, June 28, 2011

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் நிதி மறுப்பு : மனமுடைந்த பயனாளி வீரகுமார் தீக்குளிப்பு!

இளையான்குடி ஒன்றியம்  தெற்கு விசவனூரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி நிறுத்தப்பட்டதால் மனமுடைந்த ஏழைத் தொழிலாளி வீரக்குமார் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 
சிகிச்சை பெற்று  வரும் அவரை பல்வேறு முன்னணியினர் சந்தித்து  ஆறுதல்  கூறி வருகின்றனர்.
இளையான்குடி ஒன்றியம்  தெற்கு விசவநூரைச் சேர்ந்தவர் சி.வீரக்குமார். இவருக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடு வழங்கப்பட்டு முதல்  தவணையாக ரூ. 10,900 மும் இரண்டாவது தவணையாக ரூ. 7,400 ம்  வழங்கப் பட்டது.கடன் வாங்கி வீடு காட்டியதாலும் மீதமுள்ள அரசுத் தொகை  நிறுத்தப் பட்டதாலும் மனமுடைந்த வீரக்குமார் உடலில் மண்ணெண்ணெய்  ஊற்றி தீக்குளித்தார். அதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்  அவரைக்  காப்பாற்றி இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  

No comments:

Post a Comment