திருவாரூரில் தலைவர் கலைஞர் உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், நாளை (புதன்கிழமை 23 -03 -11) அன்று நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் நாளை பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார். இதற்காக திருவாரூரில் தெற்கு வீதியில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு மாவட்ட எல்லையான குமாரமங்கலத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
No comments:
Post a Comment