Monday, June 20, 2011

ஜெயலலிதா பல முதல்முதலுக்கு சொந்தக்காரர்!

அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளரும் தமிழகத்தின் தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா பல முதல் முதலுக்கு சொந்தக்காரர்  ஆவார்.நடிகையாக இருந்த ஜெயலலிதாதான் அரசியல்வாதியாக மாறிய தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராவார்.அதே நேரத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதலாவது முதலமைச்சரும் இவர்தான்!

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு மட்டும் 1996ஆம் ஆண்டில் மூன்று தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக மட்டும் 12 பெரிய ஊழல் வழக்குகள் இருந்தன.ஜெயலலிதாவின் நெருங்கிய  தோழி சசிகலா,முன்னாள் அமைச்சர்கள்,தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோரின் மீது மொத்தம் 33வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா நடத்திய போராட்டமும் அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்புகளும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்கையை பெரிதும் பாதித்தன.இதில் சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டும்,இன்னும் சில வழக்குகளில் விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்!

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழக்கு,டான்சி நில ஊழல் வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு, திராட்சை வருமானவரி வரி வழக்கு, மேனா விளம்பர, நிறுவன வழக்கு, கிரானைட் குவாரி வழக்கு மற்றும்   வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு. பிறகு சசிகலாவின் மேல்: அந்நியச் செலவாணி விதி மீறல் வழக்கு, ஜெஜெ டி.வி.வழக்கு. கறுப்புப் பண முதலீடு வழக்கு, வெளிநாட்டு முதலீடுகள் வழக்கு என மொத்தம் 12  வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டது.



ஒவ்வொரு வழக்கின் நிலையையும் தனித் தனி பதிவாக இடப்படும் (தொடரும்)









No comments:

Post a Comment