Monday, July 11, 2011

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு

1993 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனத்திட மிருந்து,தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக 20 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் அரசுக்கு 6.5கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா உள்ளிட்ட 10பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதாவும் மற்றவர்களும் இணைந்து கூட்டாக சதி செய்து தரம் குறைந்த நிலக்கரியைத் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இறக்குமதி செய்து பெரும் இழப்பை ஏற்படுத்தினார்.இது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. அதன்பின், சாட்சிகள் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
 
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.ஆனால்,அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், ஆர்.சி.லகோட்டி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை எதிர்கொள்ளும்படி ஜெயலலிதாவுக்கு ஆணையிட்டது.

No comments:

Post a Comment