Sunday, April 3, 2011

தா.பாண்டியனின் 'நிதானம்' மிகுந்த நெருங்கிய நண்பர்கள்!

"தோல்வி பயத்தால் முதல்வர் நிதானம் தவறிப் பேசுகிறார்"என்று  ஆம்பூர் தொகுதியில் குறிப்பிட்டிருக்கிறார் தா.பாண்டியன்!
 
எப்போதும் குடித்துவிட்டே,சட்டசபைக்குக் கூட குடித்துவிட்டே வருபவர் என்று விஜயகாந்தை ஜெயலலிதா அடையாளம் காட்டினார்.அதற்கு பதிலளித்த விஜயகாந்த்,எனக்கு ஊற்றிக் கொடுத்தவர் ஜெயலலிதாதான் போலும் என்று நிதானமாக பதிலளித்தார்.
 
இப்போது தா.பாண்டியன் எங்கேயிருக்கிறார்?ஒரு பக்கம் 'குடிகாரர்' விஜயகாந்த்,இன்னொரு பக்கம் ஊற்றிக் கொடுக்கும் ஜெயலலிதா.
 
"உன் நெருங்கிய நண்பரால் யார் என்று சொல்.நீ யார் என்பதை நான் அடியாளம் சொல்வேன்"என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி!அதன்படி பார்த்தால் இப்போது பாண்டியனின் நெருங்கிய நண்பர்கள் யார்?விஜயகாந்தும், ஜெயலலிதாவும் தானே!அவர் கலைஞரின் நிதானம் பற்றி பேசுகிறார்.அதைக் கேட்பவர்கள், படிப்பவர்கள் பாண்டியன் நிதானத்தில்தான்  அப்படிப் பேசினாரா என்று சந்தேகப் படத்தானே செய்வார்கள்!

No comments:

Post a Comment