மத்திய தணிக்கைத்துறை சுட்டிக் காட்டிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டிற்கு ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்பது முற்றிலும் அடிப்படையற்ற தவறான கணிப்பு ஆகும் என்று மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் கபில்சிபல்,ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு இழப்பு ஏதுமில்லை என்றும்,2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியுள்ள மதிப்பீடு அடிப்படையற்ற,முற்றிலும் தவறான கணக்கீடு எனவும் தெரிவித்தார்.
நாட்டின் 30 சதவீதம் வருவாய் தோளைத் தொடர்பு மூலமாகத்தான் கிடைக்கிறது என்றும் அவர்குறிப்பிட்டார்.
ஸ்பெக்ட்ரம் குறித்து மதிப்பீடு செய்ததில் மத்திய தணிக்கைக் குழு கடைபிடித்த வழிமுறை மிகுந்த வேதனை அளிக்கக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.அரசு செயல் படுத்திய திட்டத்தால் உண்மையில் பயனடைந்தவர்கள் சாமானிய மக்கள்தான் என்றும் கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு 1400 ரூபாயாக இருந்த மாதாந்திர தொலைபேசிக் கட்டணம் இன்று 114 ரூபாயாக குறைந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு 1400 ரூபாயாக இருந்த மாதாந்திர தொலைபேசிக் கட்டணம் இன்று 114 ரூபாயாக குறைந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment