Sunday, January 9, 2011

ஆளுநர் உரையும் -ஆதாயமும்:இடதுசாரிகளுக்கு அன்று இனித்ததே;இன்று கசப்பது ஏன்?

சட்டப்பேரவையில் வெள்ளிகிழைமை ஆளுநர் ஆற்றிய உரை,தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது" என்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.அதுமட்டுமின்றி 3 லட்சம் மக்களுக்கு இலவச கான்க்ரீட் வீடுகள் கட்டித்தருவது உள்ளிட்ட எல்லா அறிவிப்புகளுமே தேர்தல் ஆதாயத்துக்காகவே வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் குறை கூறியிருக்கிறார்கள்.
வாதத்திற்காக அவர்களது கருத்துக்களை சரியானதுதான் என்று ஒப்புக்கொண்டாலும் கூட,தேர்தல் ஆதாயத்திற்காக,தேர்தலுக்கு முன்பு இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது இது வரையில் நடந்திராத ஒன்றா?
2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க.கூட்டணியில்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன.அப்போது தி.மு.க.வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
விவசாயிகளுக்கு அவர்கள் கூட்டுறவு கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.1 கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும்.எல்லோருக்கும் இலவச வண்ணதொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என்பன போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தனவே,அப்போது இடதுசாரிகள் அந்தத் தேர்தல் அறிக்கையை,அரசியல் ஆதாயம் கருதி அறிவிக்கப்பட்ட அறிக்கை என்று குறை கூறியதுண்டா?
அன்று எல்லோருடனும் சேர்ந்து கொண்டு இவர்களும் "இந்தத் தேர்தலின் கதாநாயகனே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான்"என்று பாராட்டுத் தெரிவித்தது இல்லையா?
இப்போது மட்டும் ஆளுநர் அறிவித்த நல்வாழுவுத் திட்டங்களை அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி  என்று இகழ்ந்து பேசுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
ஜெயலலிதா போன்ற தீய சக்த்திகளின் கூட்டணி உறவு - சேர்வார் தோசம் என்று தானே அர்த்தம்.

No comments:

Post a Comment