Sunday, January 30, 2011

வெற்றிகொண்டான் மறைவு - கலைஞர் இரங்கல் கவிதை!!

காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து
கழகக் குரலை கர்ச்சித்துக் கொண்டிருந்த
சிங்கம் ஒன்று தலை சாய்ந்து விட்டது
ஆம்; நமது வெற்றிகொண்டானை
சாவு பற்றிக் கொண்டு விட்டது
தம்பீ வெற்றி,
உன்னைத் தோள் மீது
தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதற்கு
தொகை தொகையாய் தோழர்கள் இருந்தாலும்
அவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்து
எட்டாத தொலைவுக்கு ஏனய்யா சென்றுவிட்டாய்?
அன்பைப் பிழிந்து கொடுக்க
உன் அண்ணன் நானிருக்க
ஆயிரம் ஆயிரம் என் தம்பிமார்கள்
உன் வருகைக்காக காத்திருக்க
வண்ணமிகு சொல்லடுக்கால்
சுயமரியாதை எண்ணங்களை
தொகுத்தளித்து தோகை மயிலாக ஆடத் தொடங்கி
தொகை தொகையாய் பகை வீழ்த்தும்
போர் வாட்களாக நீயொருவன் மின்னிடுவாயே
சொல்லழகைக் கணையாக பூட்டி
மேடையில் நிமிர்ந்து நிற்கும்
உன் வில்லழகைக் கண்டு
நான் வியந்து போற்றிய
காலமெல்லாம் இனி வீண்தானோ?
வார்த்தை சித்தனே
வான் நடுங்க முழக்கமிடும் ஆண் சிங்கமே
எம் உயிரெல்லாம் நடுநடுங்க
எப்படித்தான் அடங்கிற்றோ உன் உயிர்?
நீ மறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்
நான் நம்பவில்லை
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்
உன் எக்காளக் குரல்
எதிரொலித்துக் கொண்டிருப்பதை கேட்கும்போது
மறைந்துவிட்டாய் நீ என்பது
நம்ப முடியாத வார்த்தைக் கோவை
இருக்கின்றாய் நீ என்றைக்கும் கழகத்தோடு
அண்ணாவோடு
அவர்தம் தம்பியராம் எங்களோடு

Saturday, January 29, 2011

கழகத்தின் மூத்தப் பேச்சாளர் தன் பேச்சை நிறுத்திக் கொண்டார் :(

 தனது அனல் மட்டுமல்ல அணுக்கள் தெறிக்கும் பேச்சினாலும் கழகத்தின் எதிரிகளையும்,அந்த எதிரிகளை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும்
இயக்கிவந்த பார்ப்பனர்களையும் எதிர்த்து குரல் கொடுத்து வந்த அன்பு மாமா 
வெற்றிகொண்டான் காலமானார் என்ற செய்திகேட்டு.. 
சேகர்பாபு கழகத்தில் இணைந்த மகிழ்ச்சியையும் தாண்டிஅத்தனை சோகம் மனதிற்குள்.
பார்ப்பன வெறியர்களான ஜெயலலிதாவிற்கு எதிராகவும்,சங்கராசாரியர்களுக்கு எதிராகவும் தன்னுடைய கருத்துக்களை தனக்கே உரிய நையாண்டியோடும்,நகைச்சுவையோடும் எளிய மக்களுக்கு
கொண்டு சேர்த்ததில்அவர்க்கு இணை எவருமில்லை.கழக கூட்டங்களிலும்,எத்தனை பெரிய மாநாடு
என்றாலும் அந்த கூட்டங்களில் அரசியல் வரலாறுகளை நினைவு கூறுவது அவரது பேச்சுகளின் சிறப்பு.கலைஞர் அவர்கள் இந்திராகாந்தி,ராஜாஜி,காமராசர் மற்றும் அனைத்துலக தலைவர்களிடம் ஆடிய அரசியல் விளையாட்டுகளை மக்களிடத்திலே தன் வாழ்நாள் முழுதும் பரப்பியவர்.ஆக பல கூட்டங்களில் அவர் வெளிப்படுத்திவந்த தன் வாழ்நாள் ஆசையை இன்று இயற்கை நிவர்த்தி செய்தது. 
  

இது ச்சும்மா ட்ரைலர்தான்!!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இதுவரை நிறைவேற்றியுள்ள திட்டங்களில் பலனடைந்தவர்கள் விவரம்:

* ரூ.7,000 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி - 23 லட்சம்

* ஒரு ரூபாய் அரிசி திட்டம் - ஒரு கோடியே 88 லட்சம்

* கலர், "டிவி' திட்டம் - ஒரு கோடியே 50 லட்சம்

* 37 நலவாரியங்களில் உறுப்பினர்கள் - 2 கோடியே 14 லட்சம்

* கலைஞர் காப்பீட்டுத் திட்டம் - ஒரு கோடியே 34 லட்சம்

* அரசு ஊழியர்கள் சம்பள கமிஷன் அமல் - 13 லட்சம்

* பென்ஷன் பெறுவோர் - 6 லட்சம்

* புதிதாக அரசு வேலை பெற்றவர்கள் - 5 லட்சம்

* பணி வரன்முறை - 3 லட்சம்

* முதல் தலைமுறை பட்டதாரிகள் கட்டண சலுகை - 80 ஆயிரம்

* தனியார் வேலைவாய்ப்பு - 1 லட்சத்து 50 ஆயிரம்

* திருமண உதவித் திட்டம் - 3 லட்சம்

* முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை - 22 லட்சத்து 26 ஆயிரம்

* கான்கிரீட் வீடு - 2 லட்சத்து 50 ஆயிரம்

Thursday, January 27, 2011

தமிழக மீனவரின் குடும்பத்திற்கு அரசு பணி.

இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு பணிக்கான நியமன உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் கடந்த 22-ம் தேதி இலங்கை கடற்படைக் கும்பலால் கொடூரமாக கழுத்தை இறுக்கிக் கொல்லப்பட்டார்.

இலங்கைப் படையினரின் இந்த வெறிச் செயல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டார். உத்தரவு பிறப்பித்த அன்றே ஜெயக்குமார் மனைவியிடம் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டது.

அன்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இந்த சம்பவம் குறித்து முதல்வர் தெரிவித்தார். இது போன்று தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதாகவும், இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே முதல்வர் கருணாநிதி ஜெயக்குமார் மனைவி முருகேஸ்வரிக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாக ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. தெரிவித்திருந்தார். அந்த உத்தரவின்படி முருகேஸ்வரிக்கு ஆறுகாட்டுத்துறை அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக நியமிக்கப்பட்ட பணி உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. இந்த உத்தரவை ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. ஜெயக்குமார் மனைவியை நேரில் சந்தித்து வழங்கினார்.

Thursday, January 20, 2011

அப்போ சீமான் என்ன புட்டிபால் குடித்துக்கொண்டிருந்தாரா...?

சமீபத்தில் திரைப்பட இயக்குனர்,மற்றும் குணச்சித்திர நடிகரும்,'நாம் தமிழர்' இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான சீமான் & ஜெயா குழுமத் தொலைகாட்சிக்காக நேர்காணல் நடத்துனர் ராபிபெர்னாட்டுக்கு சிறப்பு நேர்காணல் அளித்திருந்தார்.
லையின் பேன் கடித்தால்கூட அனுமதி பெற்றுதான் சொரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்றும்,சம்பளம் போதவில்லை என்றும் தான் ரபிபெர்னாட் தன் பணி இருப்பிடத்தை மாற்றினார்.நிலா தொலைகாட்சியின் பங்குதாரராகி கையைச் சுட்டுக்கொண்டார்.இவரை மிகுந்த நேர்மையாளர் என்றும்,ஈழ அரசியலில் விசாலப் பார்வை கொண்டவர் என்ற நினைப்பிலுமே தோழர் சீமான் அவருக்கு நேர்காணல் அளித்திருப்பார் என்று நம்புவோமாக!
பிபெர்நாட் ஒரு சந்தர்ப்பவாதி.வருமானம் வருகிறது என்றால் அவரது நாக்கு எதையும் கேட்கும்,பேசும்!அவர் சன் தொலைக்காட்சியில் முதல்முறையாக வேலை பார்த்தபோது,வரிசையாக தி.மு.க.வின்  அல்லது பகுத்தறிவின் எதிர்த்தரப்பினரைக் கேள்விகள் கேட்டு துளைத்தெடுப்பதில் பிரபலமானவர்..இருப்பினும் வயிறு பெருத்தது..தொந்தி பெருத்தது..பசி அதிகமாயிற்று..எங்கே போனால் வயிறார சோறு கிடைக்கும் என்றே அலையும் ஒரு நாடோடியைப்போல அலைந்த ரபிபெர்னாட்டிற்கு ஜெயலலிதா அம்மையாரின் அன்னதானத் திட்டம் மனம் குளிரச் செய்துவிட்டது போலும்!அதனாலேயே ஜெயா தொலைகாட்சி குழுமத்தில் தஞ்சமடைந்து இன்றளவும் பசியறியாமல் தன் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.அப்படிப்பட்ட பிரகஸ்பதியான ரபிபெர்னாட்டை ஒரு பெரிய அறிவாளி என்றோ,ஈழப் போராளிகளின் அபிமானி என்றோ..தவறான கணிப்புக்கு வந்ததன் விளைவாகவே தோழர் சீமான் மேற்படியாளருக்கு நேர்காணல் உரையாடலளிக்க சம்மதித்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது.
வ்வுரையாடலில் சீமான்,தன்னுடைய மிகப் பெரிய ஐயப்பாடாகவும் விடை தெரிய வேண்டுமென்ற எண்ணத்திலும் தமிழ்நாட்டு முதல்வரை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.இறையாண்மை அதாவது, இந்திய இறையாண்மை என்றால் என்ன? அதுபற்றி தனக்கொன்றும் தெரியவில்லை என்றும்,முதல்வர் இக்கேள்விக்கு விளக்கமான பதிலைச் சொல்ல வேண்டுமென உரையாடியிருக்கிறார்.இதற்க்கு முதல்வர் அளவிலான பெரிய மனிதர்கள் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமே இல்லை,தனிப்பட்ட முறையில் முறையில் ரபிபெர்னாட்டிடம் கேட்டிருந்தால்கூட சொல்லியிருப்பார்.
ஒரு தாய் தன் மகனைப் பார்த்து இன்னார்தான் உன் தகப்பன் என அடியாளம் காட்டும்போது,அத்தாயிடம் குறுக்குக் கேள்விகளேதும் கேட்காமல் அவள் சொல்வதை அப்படியே நம்பி அடையாளப்படுத்தப்பட்ட நபரை தன தந்தையாக அவரை ஏற்றுக் கொண்டு நேசிப்பதுதான் இறையாண்மை என்பது.வீடும் தேசமும் ஒன்றுதான்.அவ்வகையில் தேசத்தின் வார்த்தைகளை நம்ப வேண்டும்.இதுதான் தேசிய இறையாண்மை.தேசத்தின் வார்த்தைகள் என்றால் என்ன?நாட்டை எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள்,நாட்டுக்கான பாதுகாப்பு கட்டுமானங்கள்,நாடு சிதறுண்டு போகாமலிருக்க உள்நாட்டுக் கட்டுப்பாடுகள் என்றெல்லாம் சில கூறுகளை உள்ளடக்கிய சட்டங்கள் செயல்படுத்த தேசத்தை தேசத்தை ஆளும் தலைவர்கள்.முனையும்போது அதற்குப் பூரண ஒத்துழைப்பு நல்குவதே தேசிய இறையாண்மை எனக் கருதப்படுகிறது.ஆக...இதைப் படிக்கும் தோழர் சீமானுக்கு இறையாண்மை பற்றிய ஐயம் நீங்கியிருக்கும் என்று நம்புவோம்.
அடுத்து..அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது செல்லாது என்றும்,சிறைப்படுத்தியது தவறு என்றும் நீதிமன்றம் சொல்லிவிட்டதாம்! அதனால் தன்னைக் கைது செய்ததற்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்லியே தீரவேண்டுமென்று கொக்கரிக்கிறார் சீமான்.சீமான் போன்ற கால்வேக்காட்டு அரசியல்வாதிகள் இன்னும் நிறைய கற்றுத் தேறவேண்டும்..பக்குவப்படவேண்டும்..அனுபவப்படவேண்டும்.
நமது இந்திய பீனல் கோர்ட் சட்ட நடைமுறையும்,வழக்காடுதலும்,தீர்ப்புமுறைகளும்,திறமையாக வாதாடுதல்,வெற்றிபெறுதல் என்றக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன.அடர்க்குக் காரணம்,ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதிக்கூட தண்டிக்கப்படக்கூடாது,என்ற உயரிய கொள்கையேயாகும்.அவ்வகையில் சீமான் போன்ற எத்தனயோ குற்றவாளிகள் தப்பியிருக்கலாம்...அதற்க்கெல்லாம் நொட்டாங்கு பேசிக்கொண்டிருக்கக் கூடாது.இயக்குனர் தங்கர்பச்சான் முதல்வரைச் சந்தித்து பேசி சீமானுக்காக பரிந்து பேசினார்..முதல்வரும் மனமிரங்கினார்.அதன் பின்னரே அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அழுத்தமான வாதங்கள் வைப்பதை நிறுத்திகொண்டனர்.எனவே சீமான் வெளியே வந்துவிட்டார்.அவ்வளவுதான்.தங்கர்பச்சானை சிறைக்கு அழைத்து சந்தித்து,முதல்வரை சந்தித்துப் பேசுங்கள் எனச் சொல்லிவிட்டு,அவர் முதல்வரை சந்தித்து விட்டார்...முதல்வரும் விடுதலைக்கு சம்மதித்துவிட்டார் எனத் தெரிந்ததும் உள்ளுக்குள் மகிழ்ந்தபடியே சும்மனாங்காட்டியும் வெளிப்பூச்சாக தங்கரைக் கண்டித்து கடித நாடகம் ஆடியவர்தானே சீமான்.
சிரிப்புதான் வருகிறது...சீமானை மாதிரி எத்தனை அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறது தமிழகம்!
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இதே இறையான்மை பிரச்சினை காரணமாக வைகோ உள்ளிட்ட எட்டுபேரை பொடா சட்டத்தில் கைது செய்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார்.அப்போ சீமான் என்ன புட்டிபால் குடித்துக்கொண்டிருந்தாரா...? பொடா கைதை எதிர்த்துப் பேச அன்று கலைஞரைத் தவிர ஒரு நாதியும் இல்லையே..ஒரு ஐந்தாண்டு மாற்றத்திற்குப் பின் குறுகிய காலத்தில் அரசியல் அறிவும்,ஆர்வமும் சீமானுக்கு எப்படி வந்தது..?ஏன் வந்தது..?
கலைஞர் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் தற்காலிகமாக இலங்கை ஈழத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாளில் தமிழக அரசு சொன்னது.அப்போது சீமான் கலைஞரால்தான் போர் நிறுத்தம் அறிவித்தேன் என ராஜபக்சே சொல்லட்டும்!அப்போதுதான் நம்புவோம் என்றார்.இவர் பிரபாகரனைச் சந்தித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.இப்பொழுது,தான் எழுதிக்கொண்டிருக்கிற பத்திரிக்கை தொடரில் மேதகு பிரபாகரனோடும்,மற்ற தலைவர்களோடும் அடிக்கடி அளவளாகி மகிழ்ந்ததாகி வேறு எழுதுகிறார்!ஆனால் பிரபாகரனைச் சந்தித்ததாக சொல்வது பொய்.சந்தித்தபோது எடுத்தப் படமாகக் காட்டுவது கிராபிக்ஸ் படம் என்று சொன்னால் அதற்க்கு சீமான் என்ன சொல்வார்?எப்படி நிரூபிப்பார்? "சீமான் என்னை வந்து சந்தித்தார்" என்று பிரபாகரன் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா..?அல்லது நடேசன் சொல்லியிருக்கிறாரா..? இவர்கள் அப்படி ஒன்றும் சொல்லாதபோது,சீமான் சொல்லுவதை மட்டும் எப்படி நம்புவது?ஆக...ஏதாவது சொல்லி தமிழ்மக்களை ,இளைஞர்களை ஏமாற்றி அவர்களின் மொழி இன உணர்வைத் தூண்டிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற பகல்கனவின்  விளைவாகவே சீமான் போன்றவர்கள் திடீர் புலி ஆதரவு நிலைபாடு எடுத்து பிரபாகரனை சந்தித்ததாக கதையளந்து மக்களை ஏமாற்றித் திரிக்கின்றனர் என்றால் இதை மறுக்க,வலுவான ஆதாரமேதும் சீமானால் காட்ட முடியுமா..?
இவர் பிரபாகரனை சந்தித்தார் என்றால் எப்படி சந்தித்தார்..இலங்கைக்குப் போக விசா எப்போதுப் பெற்றார்.அது பெறவில்லை என்றால்..சென்றதும் உண்மை என்றால்..கள்ளத்தனமாக வெளிநாடு சென்றது குற்றமாகாதா?அதற்க்காகவுமல்லவா இவரைத் தூக்கி உள்ளே போட வேண்டும்.இவர் மீனவர்களுக்காக போராடுகிறாராம்!மீனவர்களுக்கு கடலில் எல்லை தெரியவில்லையாம்..மீனவர்களை யாராவது அடித்தால் இவர் திருப்பி அடிப்பாராம்..தமிழ்நாட்டு அரசாங்கத்தை வேசிமகன் அரசாங்கம் என்பாராம்.இப்படியெல்லாம் பேச சொல்லித்தான் பிரபாகரன் சொல்லிக் கொடுத்திருப்பாராக்கும்...
பிரபாகரன் ஒரு போராளி! விடுதலைப் போராளி!!விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை நிர்மாணித்து போர்க்களம் மட்டுமின்றி நிர்வாக ஆட்சியல் நடைமுறையிலும் அவ்வியிக்கத்தை நடைபோடவைத்தவர்.உலக ஆட்சியாளர்கள் அனைவரையும் அச்சத்துடனும்,நன்மைதிப்புடனும் தன்னை திரும்பி பார்க்க வைத்தவர்.இவ்விதம் ஒரு போராளித் தலிவராக வளர அவர் பிறந்த ஈழ மண்ணே பெரிய காரணம்.ஆனால்,சீமான் எஸ்.பி.மெய்யரசு போன்றோர் பிறந்து வளர்ந்தது இந்திய தமிழ் மண்ணில்.இங்கே முத்துவேலர் கருணாநிதி என்பவர் மாணவர் பருவத்திலேயே கையெழுத்திதழ் நடத்தினார்.பகுத்தறிவு பாதையை தேர்வு செய்தார்.திரைப்பட,நாடக கதை வசனம் எழுதினர்.அண்ணாவின் பின்னால் அணி சேர்ந்தார்,மாணவர்களை சேர்த்துக்கொண்டு தாய்மொழி காக்க இந்தியை எதிர்த்தார்,மனிதனை மனிதனே இழத்துச் சுமக்கும் கைரிக்ஷாவை ஒழித்தார்,இந்தியாவில் அனைத்து மாநில முதல்வர்களும் தங்களின் கரங்களால் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தார்,சிறந்த நிர்வாகி எனப் பெயரெடுத்தார்.இவ்விதம் முத்துவேலு கருணாநிதி பெயர் பெற இந்திய தமிழ்மண்ணே காரணம்.வேலுபிள்ளை பிரபாகரன் பாதை வேறு..முத்துவேலர் கருணாநிதி பாதை வேறு...இருவரையும் ஒப்பிட்டோ அல்லது ஆய்வு செய்தோ சீமான் போன்றவர்கள் குழப்பக் கொள்ளக் கூடாது. சமீபத்தில் அமெரிக்க இரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதளம் விடுதலைபுலிகள் விவகாரம் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி,கடந்த 2004ஆம் ஆண்டு சுமார் 4000 துருப்புகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய கர்ணாவை அப்போதைய சந்திரிகா அரசு பாதுகாப்புக் காரணத்திற்க்காக தமிழ்நாட்டிற்குதான் அனுப்பி வைத்தாராம்.அப்போது இங்கே முதல்வராய் இருந்தவர் ஜெயலலிதா அம்மையார்தான்.மேலும் சென்னை,நீலகிரி எஸ்டேட் போன்ற இடங்களில் கர்ணா அண்ட் கோ'வினர் மிகமிக பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.2006இல் ஜெயலிதா அம்மையார் ஆட்சி முடிவுற்று தி.மு.க.ஆட்சி தொடங்கிய பின்னர் இனிமேல் இங்கே சரிபட்டு வராதெனக்  கருதி அவசர அவசரமாக இலங்கை திரும்பியிருக்கின்றனர் கர்ணாவும் அவர் சகாக்களும்.இதுதான் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய தகவல் பரிமாற்றத்தின் சுருக்கமான சாராம்சம்.விக்கிலீக்ஸ் செய்திகளை இதுவரை அமெரிக்கா அதிகாரபூர்வமாக மறுக்கவில்லை.ஆனால் ஹிலாரிகிளிண்டன் மூலமாக செய்திகளை மழுப்புவதும் சமாளிப்பதும் சமாதானம் செய்வதுமாகத்தான் இருக்கிறது அமெரிக்க நிர்வாகம்.
ஆக துரோகி கர்ணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது ஜெயலலிதா அம்மையார்! போர் நிகழ்ந்தால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள் என்றது ஜெயலலிதா அம்மையார்..!பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று சொன்னதும் ஜெயலலிதா அம்மையார்தான்!இந்த லட்சணத்தில் இங்கே இல்லை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசிய சீமானெல்லாம் ஒன்று கர்ணாவின் கூலியாளாக இருக்க வேண்டும்! அல்லது இந்திய மண்ணில் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென்ற அந்நிய உளவு நிறுவனம் ஏதேனுமொன்ரின் ஏஜென்ட்டாக இருக்க வேண்டும்!எனவே சீமான் போன்றவர்களை உளவுத்துறை கண்காணிப்பிலேயே வைத்திருப்பது அவசியம்.மற்றபடி ரபிபெர்னாட் போன்ற நேர்காணல் நடத்துனர்கள்...பாவம் கூலிக்கு மாரடிப்பவர்கள் விட்டுவிடுவோம்.         

Friday, January 14, 2011

உதைத்த காலுக்கு முத்தம் தர கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜெயலலிதா அழைப்பு!

அப்பாடி!கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆசை நிறைவேறிவிட்டது.இத்தனை நாளும் அவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் அலட்சியப்படுத்தி வந்த ஜெயலலிதா இப்போது,
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது,அ.தி.மு.க.வினர் நடத்திய அராஜகங்கள்,அட்டூழியங்கள் ஆகியவற்றை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தோளோடு தோள்நின்று ஆதரித்ததையும்,அவைக் காவலர்களை அ.தி.மு.க.வினர் தாக்கியதையும்,முகத்திலும்,மார்பிலும் ஓங்கி ஓங்கிக் குத்தி தாக்கியதையும்,அவைக்கு வெளியே பேச்சு,பேட்டி,போட்டிக் கூட்டம் ஆகியவைப் போன்ற நகைப்புக்குரிய - அதேசமயம் காலிதனத்துக்கு நிகரான கலவரங்களையும் பலமாக கம்யூனிஸ்டுகள் ஆதரித்து நின்றதையும் கண்ட ஜெயலலிதா,இனியும் நாம் இவர்களை மதிக்காமல் இருக்கக் கூடாது.இவர்கள் ரொம்பவும் நல்லப் பிள்ளைகள் ஆகிவிட்டார்கள்.நமது கடைசி ஏவலாட்களாக நடந்து கொள்வார்கள்.நாம் ததளையால் இட்ட உத்தரவுகளை அவர்கள்,தங்களது முனுமுனுப்பைக்கூட காட்டாமல் நிறைவேற்றித்தர பாடுபடுவார்கள் என்று நினைத்து கம்யூனிஸ்டு கட்சியினர்பால் தனது கருணை பார்வையை திருப்பியிருக்கிறார்.
இது கம்யூனிஸ்ட்களுக்கு வரலாறு காணாத மகிழ்ச்சியை வாரி வழகியிருக்கிறது.அவர்கள் ஆஹா அம்மாவுக்கு வன்முறை என்றால் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்.அதனால் சட்டசபையில் அம்மாவின் பார்வையை நம் பக்கம் திருப்பவும்,அதன் மூலம் அம்மாவின் நன்மதிப்பை பெறவும் நாம் அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து கொண்டு அவையிலும்,வெளியிலும் நிகழ்த்திய களேபரங்கள்,கழகங்கள்,அமளிகள்,-அம்மாவின் திருப்பார்வை நம் மீது திரும்பவைத்துவிட்டது  என்ற சந்தோஷம் உச்சம் தலைக்கேற உவப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.'தமிழக சட்டபேரவை தேர்தலில் கூட்டணி பற்ற பேச வாருங்கள்' என்ற இரு கம்யூனிஸ்ட்டு கட்சிகளுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது குறித்து செய்தி வெளியிட்ட தினமணி பத்திரிக்கைக் கூட இடதுசாரிகளை தேர்தல் கூட்டணிக்காக வருமாறு ஜெயலலிதா விடுத்த அழைப்பை அந்தக் கட்சிகளின் மீது ஜெயலலிதா கொண்டுள்ள மதிப்பின் காரணமாக விடுக்கப்பட்ட அழைப்பு அல்ல அது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு கிட்டு என்ற நெஞ்சு கொள்ளாத ஆசையுடன் ஜெயலலிதா கால் கடுக்க காத்து நின்றார்.அவரது ஆசை நிறைவேராதி என்பதை சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கே 'தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது அது தொடரும்' என்று பகிரங்கமாகவே அறிவிப்பு செய்ததின் மூலம் நிராசையாக,நிறைவேறமுடியாத ஆசையாக ஆகிவிட்டது.அதன்பிறகே வேறு வழியில்லாத ஜெயலலிதா,இடதுசாரிகளுக்கு கூட்டணி பற்றி பேச அழைப்பு விடுத்திருக்கிறார்.மற்றபடி இந்த கட்சியினரின் பலத்தையோ,மக்கள் செல்வாக்கையோ மதித்து அல்ல,அல்லவே அல்ல என்பதை தெளிவாக்கும் வகையில் தினமணி எழுதியுள்ள செய்தி விமர்சனம் வருமாறு;
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பற்றி பேச வருமாறு இரு கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா  அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய,மாநில கொள்கைகளுக்கு எதிராகவும்,விலைவாசி உயர்வைக் கண்டித்தும்,இடதுசாரிகளின் முன்முயற்சியால் ஏப்ரல் 27 மற்றும் ஜூலை 5 என அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.இந்தப் போராட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு அளித்தது.
இதேபோல்,மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ச்சியான கூட்டுப் போராட்டங்களை நடாத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முயர்ச்சித்தன.
எனினும்,மாநில தி.மு.க அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களி நடத்திய அ.தி.மு.க.,காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நேரடி போராட்டங்களை நடத்த ஆர்வம் காட்டவில்லை.கோவை,திருச்சி,மதுரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா கலந்துகொண்ட பிரம்மாண்டமான ஆர்பாட்டங்களை அ.தி.மு.க.நடத்தியது.அந்த ஆர்பாட்டங்கள் அனைத்தும் தி.மு.க.அரசுக்கு எதிராகவே நடத்தப்பட்டன.இதற்கிடயே மதுரை ஆர்பாட்டத்திற்கு முன்பாக கடந்த செப்டம்பர் 28ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர்.சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தனித் தனியாகப் போராட்டங்களை நடத்துவது அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதுப்பற்றி மதுரை அ.தி.மு.க.ஆர்பாட்டம் ( அக்.18 ) முடிந்தபின் பரிசீலிக்கலாம் என்று அவர்களிடம் ஜெயலலிதா தெரிவித்ததாக அப்போது கூறப்பட்டது.எனினும்,மதுரை ஆர்ப்பாட்டத்துக்கு பிறகும் கூட்டுப் போராட்டம் பற்றி அ.தி.மு.க.தரப்பிலிருந்து கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு  எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையே "2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தொடர்புடைய அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று" மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.இதனால்,மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றால்,மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர தயார் எனக் கடந்த நவம்பர் 11ம் தேதி ஜெயலலிதா அறிவித்தார்.ஜெயலலிதாவின் இந்த ஆதரவு அறிவிப்புக்கு,கம்யூனிஸ்டு கட்சிகள்,குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தது.
அதன் பிறகு  2ஜி அலைகற்றை பிரச்சினையை முன் வைத்து நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடத்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்தன.சென்னையில் அ.தி.மு.க.உள்ளிட்ட எதிர்கட்சிகளை அழைத்து பெரிய அளவில் பேரணி நடத்தவும் அக்கட்சிகள் தீர்மானித்தன.
எனினும்,காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து அ.தி.மு.க.தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்ததால்,கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டுப் பேரணி நடத்துவதில் அ,தி.மு.க. ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்பட்டது.கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்த அ.தி.மு.க.பொதுக்குழுக் கூட்டத்தில் கூட,சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஜெயலலிதா கூறினாரே தவிர,ஏற்கனவே கூட்டணியில்,ம.தி.மு.க. வுடன் பேச்சு நடத்துவது குறித்து எதுவும் கூறவில்லை.
நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன்,அ.தி.மு.க தீவிர பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும்,ஆனால்,கம்யூனிஸ்ட் கட்சிகள்,ம.தி.மு.க.வுடன் உடனடியாக பேசுவதை அ.தி.மு.க. தவிர்ப்பதாகவும் அப்போது பேச்சு எழுந்தது.
இந்நிலையில்,சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்,தி.மு..க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிவித்துவிட்டுச் சென்றார்.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி முறிய எவ்வித வாய்ப்புமில்லை என்பதை இருகட்சிகளும் உறுதியாக தெரிவித்துவிட்டன.இந்தச் சூழலில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி பற்றி பேச வருமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.இதை மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்,சென்னையில் திங்கட்கிழமை உறுதி செய்தார்.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் அணிக்கு எதிராக ஒரு உறுதியான அணியை நாமெல்லாம் சேர்ந்து அமைக்க வேண்டும் என்று தன்னிடம் தொலைபேசி மூலம் ஜெயலலிதா கூறியதாக பிரகாஷ் காரத் தெயவித்தார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களையும் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.என்பதாக செய்தி விமர்சனம் வெளியிட்டிருக்கிறது. எப்படியிருப்பினும் என்ன? "மதியாதார் தலைவாசல் மிதியாதீர்" என்று நமது முன்னோர்கள் அனுபவத்தின் மூலம் சொன்ன முதுமொழிகளை பத்து சீட்டுக்காக மானம் மரியாதை எதையும் இழந்துவிட எப்போதும் காத்திருக்கும் கம்யூனிட்டுகள் மதிக்கவா போகிறார்கள்.அவர்கள் தி.மு.க. ஆட்சியை அகற்றியே தீருவோம் என்று ஆர்பரித்து, 1991 - 1996,2001 - 2006 ஆகிய காலகட்டங்களில் தொடர்ந்து காட்டாச்சி நடத்திய ஜெயலலிதாவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைய படாதபாடு படுகிறார்கள்!ஆதனால்தான்
                                           
                                            உதைத்த காலுக்கு
               முத்தமிடத் துடிக்கிறார்கள்.

Sunday, January 9, 2011

ஆ.தி.மு.க.கூட்டணி உருவாகிவிட்டது;அதன் அராஜகமும் அட்டூழியமும் ஆராம்பமாகிவிட்டன!

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது ஜெயலலிதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு இடதுசாரிகளும் ம.தி.மு.க.வினரும் அவையின் விதிமுறைகளை மீறி அமளியில் ஈடுபட்டார்கள்.அவர்களை அவையிலிருந்து வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
பேரவை தலைவரின் துச்சமாக மதித்த அவர்கள்,தங்களை வெளியேற்ற வந்த அவைக் காவலர்களையும் அடித்து உதைத்து இருக்கிரர்ர்கள்.எதிர்கட்சிகளின் இந்தஅராஜகங்கள்,அட்டூழியங்களுக்கு என்ன காரணம்?அவர்கள் ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்து விட்டார்கள் என்பது தவிர வேறு என்ன?
ஜெயலலிதாவிற்கு ஜனநாயக அரசியலை விட வன்முறைகள்,காலித்தனங்கள்,கலவரங்கள் நடத்துவதிலேயே அசாத்தியமான.
அரசியலில் வெற்றி பெற வன்முறைகளே பெரிதும் உதவும்படியாக இருக்கும் என்பதிலும் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
1983 இல் அவர் ஆ.தி.மு.க.வில் சேர்ந்து முழுநேர அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.அதிலிருந்து ஒவ்வொரு சமயத்திலும் வன்முறைகளை 
கட்டவிழ்த்து விடுவது,எதிரிகள் மீது அபாண்டமாகக் கொலைப் பழிகளைச் சுமத்துவது என்பதிலேயே அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
வி.என்.ஜானகிஅம்மையாரின் ஆட்சியை சட்டசபையில் அடிதடி கலவரம் நடத்தி அதன் மூலமே ஆட்சியையும் கவிழ்த்த 'பெருமை'அவருக்குண்டு.தி.மு.கழக ஆட்சியில் சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞரை பார்த்து 'குத்துங்கடா அவனை' என்று வெறிக் கூச்சலிட்டு கலவரத்தைத் தூண்டி விட்டு,என் புடவையை பிடித்து இழுத்தார்கள் என்று விஷமப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டவர் அவர்.நாவலரை எனது உடம்பிலிருந்து உதிர்ந்த ரோமம் என்று பழி தூற்றியவர்.திருநாவுக்கரசு போன்ற ஆ.தி.மு.க வின்  4 தலைவர்களை தெருநாய்கள் என்று அர்ச்சித்தவர்.
கலைஞர்,மூப்பனார்,ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் தன்னைக் கொலை செய்ய முயர்ச்சித்ததாக பழி தூற்றியவர் அவர்.வக்கீல் விஜயனின் காலை வெட்டவும்,வக்கீல் சண்முகசுந்தரத்தின் 
கை விரல்களை வெட்டவும்,ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திரலேகாவின்  முகத்தில் ஆசிட் வீசவும் காரணமானவர் என்றும் பல்வேறு  குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் அவர்.அப்படிப்பட்ட அராஜகியுடன் கூட்டு சேர்ந்து விட்டார்கள் இடதுசாரிகள் என்பதையே ஆளுநர் உரையின்போது அவர்கள் ஆ.தி.மு.க.வுடன் சேர்ந்துகொண்டு நடத்திய வன்முறையும்,கலவரமும் எடுத்துகாட்டுவனாக அமைந்துள்ளன.
இனி தேர்தலுக்கு முந்தைய - வரும் மூன்று மாதங்களிலும் தேர்தலின் போதும் இவர்கள் அராஜகி ஜெயலலிதாவுக்கு உதவும் வகையில் வீதியில் இறங்கி வன்முறை வெறியாட்டம் நடுத்துவார்கள்.தமிழக சட்டம் ஒழுங்கைக் குலைக்க தகாத போக்குகளைக் கையாள்வார்கள் என்பதற்கு ,ஆளுநர் உரையின்போது அவர்கள் நடத்திய சட்ட விதிகளுக்கு முரணான வன்முறை வெறியாட்டங்கள் கட்டியங்கூறுவனவாக அமைந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் என்ன?

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 .76 லட்சம் கோடி இழப்பா?அடிப்படையற்ற முற்றிலும் தவறான கணக்கீடு!

மத்திய தணிக்கைத்துறை சுட்டிக் காட்டிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டிற்கு ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்பது முற்றிலும் அடிப்படையற்ற தவறான கணிப்பு ஆகும் என்று மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் கபில்சிபல்,ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு இழப்பு ஏதுமில்லை என்றும்,2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியுள்ள மதிப்பீடு அடிப்படையற்ற,முற்றிலும் தவறான கணக்கீடு எனவும் தெரிவித்தார்.
நாட்டின் 30 சதவீதம் வருவாய் தோளைத் தொடர்பு மூலமாகத்தான் கிடைக்கிறது என்றும் அவர்குறிப்பிட்டார்.
ஸ்பெக்ட்ரம் குறித்து மதிப்பீடு செய்ததில் மத்திய தணிக்கைக் குழு கடைபிடித்த வழிமுறை மிகுந்த வேதனை அளிக்கக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.அரசு செயல் படுத்திய திட்டத்தால் உண்மையில் பயனடைந்தவர்கள் சாமானிய மக்கள்தான் என்றும் கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு 1400 ரூபாயாக இருந்த மாதாந்திர தொலைபேசிக் கட்டணம் இன்று 114 ரூபாயாக குறைந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆளுநர் உரையும் -ஆதாயமும்:இடதுசாரிகளுக்கு அன்று இனித்ததே;இன்று கசப்பது ஏன்?

சட்டப்பேரவையில் வெள்ளிகிழைமை ஆளுநர் ஆற்றிய உரை,தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது" என்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.அதுமட்டுமின்றி 3 லட்சம் மக்களுக்கு இலவச கான்க்ரீட் வீடுகள் கட்டித்தருவது உள்ளிட்ட எல்லா அறிவிப்புகளுமே தேர்தல் ஆதாயத்துக்காகவே வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் குறை கூறியிருக்கிறார்கள்.
வாதத்திற்காக அவர்களது கருத்துக்களை சரியானதுதான் என்று ஒப்புக்கொண்டாலும் கூட,தேர்தல் ஆதாயத்திற்காக,தேர்தலுக்கு முன்பு இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது இது வரையில் நடந்திராத ஒன்றா?
2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க.கூட்டணியில்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன.அப்போது தி.மு.க.வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
விவசாயிகளுக்கு அவர்கள் கூட்டுறவு கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.1 கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும்.எல்லோருக்கும் இலவச வண்ணதொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என்பன போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தனவே,அப்போது இடதுசாரிகள் அந்தத் தேர்தல் அறிக்கையை,அரசியல் ஆதாயம் கருதி அறிவிக்கப்பட்ட அறிக்கை என்று குறை கூறியதுண்டா?
அன்று எல்லோருடனும் சேர்ந்து கொண்டு இவர்களும் "இந்தத் தேர்தலின் கதாநாயகனே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான்"என்று பாராட்டுத் தெரிவித்தது இல்லையா?
இப்போது மட்டும் ஆளுநர் அறிவித்த நல்வாழுவுத் திட்டங்களை அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி  என்று இகழ்ந்து பேசுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
ஜெயலலிதா போன்ற தீய சக்த்திகளின் கூட்டணி உறவு - சேர்வார் தோசம் என்று தானே அர்த்தம்.

Wednesday, January 5, 2011

திராவிட இயக்க தீரர் நினைவுநாள்

திராவிட இயக்க தீரர் நினைவுநாள்
சி.சிட்டிபாபு
சனவரி 5 ( 1977 )
தியாக மறவன் -கொள்கை குன்று-அண்ணா பெரும்படையின் அருந்தோண்டன் - தலைவர் கலைஞர் உடன் நின்று கழகப் பணியாற்றியத் தோழன்.

சென்னை மாநகராட்சியின் மேயர்,இருமுறை மக்களவை உறுப்பினர்,கழக கொள்கை பரப்புச் செயலாளர்,கழகக் குரல் ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியவர்.

பேரறிஞர் அண்ணா,தலைவர் கலைஞர் ஆகியோரின் அன்பிற்கு பாத்திரமானவராக திகழ்ந்தார்.

நெருக்கடி நிலை காலத்தில் ஓராண்டு மிசாக் கைதியாக இருந்தபோது ,சிறைக் காவலர்கள் தாக்கியதில் படுகாயமுற்று மரணமடைந்தார்.

படித்து வேலைவாய்ப்பற்ற 5 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு!முதல்வர் கலைஞர் நியமன ஆணைகளை இன்று வழங்குகிறார்.

தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பற்ற 5 ஆயிரம் இளைஞர்களுக்கு
தனியார் நிறுவனங்களில் பயிற்சியும்,பணிநியமனம் பெறுவதற்கான 
ஆணையும் வழங்கும் விழா இன்று ( 5 -01 -11 ) மாலை 4 .30 மணியளவில்
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அராங்கில் நடைபெற உள்ளது.
முதல்வர் கலைஞர் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு,படித்த  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயிற்சியும் பணி நியமனம் பெறுவதற்கானஆணையை வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.