Thursday, March 31, 2011

சாலை,பாலங்கள் மேம்பாட்டில் ஓர் ஒப்பீடு:


முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2001 - 06 ஆம் ஆண்டு வரை 5569 கோடி ரூபாய் செலவில் 46  ஆயிரத்து 17 கி.மீ.நீல சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டன.ஆனால்,தி.மு.க.ஆட்சியில் 2006 -11 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 529 கோடியே 48 இலட்சம் செலவில் 65 ஆயிரத்து 886 கி.மீ.சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டன.

2001 - 06 ஆம் ஆண்டு வரை 497 கோடி ரூபாய் செலவில் 871 பாலங்கள் மற்றும் 914 சிறு பாலங்கள்.
2006 -11 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் 1 ,285 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1210 பாலங்கள்,4019 மிகச் சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 2001 - 06 இல் அ.தி.மு.க.ஆட்சியில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலைகளின் எண்ணிக்கை வெறும் 6 மட்டுமே.ஆனால் 2006 -11 இல் தி.மு.க.ஆட்சியில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலைகளின் எண்ணிக்கை 48 .தீட்டிய திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட
ஆதரிப்பீர்!உதயசூரியன்!!

சட்டம் படித்த ஜின்னாவா?'தூள்' சொர்ணாக்காவா? சிந்திப்பீர்!வாக்களிப்பீர்!!

ஒரு தொகுதி-இரு வேட்பாளர்கள்- ஓர் ஒப்பீடு

ஆயிரம்விளக்குத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நேற்று (24.3.11) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரது சொத்து விவரங்களில் வீடு, மனை, விளைநிலம் எதுவுமில்லை. அவர் மனைவி பெயரில் உள்ள சொத்துகள் ஒரு ஸ்கூட்டியும் பழைய டொயாட்டோ குவாலிஸ் காரும் ஆகும். ரொக்கப் பணம், நகை, இன்சூரன்ஸ் எல்லாமாக சேர்த்து அவரது சொத்து மதிப்பு சுமார் 30 லட்ச ரூபாய்.5 ஆண்டுகாலம் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியும் ஜின்னா தன் பெயரிலோ மனைவி உள்ளிட்ட உறவினர்கள் பெயரிலோ எந்தவித அசையா சொத்துகளையும் வாங்கவில்லை என்பதை அவரது சொத்து விவரங்களை அறிந்த கட்சிக்காரர்களே ஆச்சரியப்படுகிறார்கள். அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தாமல் நியாயமாக செயல்படுபவராக உள்ள இந்த இளைஞரை, முதல்வர்கலைஞரும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் சரியாகத் தான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள். இணையதளம் மூலமாக இந்த சொத்து விவரங்களை அறிந்த ஆயிரம்விளக்குத் தொகுதி படித்த வாக்காளர்கள்.

அசன் முகமது ஜின்னாவை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியும் 24ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினம் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நான்காவது அடிஷனல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வந்தது. அங்கே ஆஜராக வேண்டிய நிலையில், அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். வருமானத்திற்கு மீறி 1 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்து குவித்தவழக்கில் ஏப்ரல் 21ந் தேதி , வளர்மதி ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வளர்மதி மீது தாமஸ்மலை காவல்நிலையத்தில் வெடிபொருள் வழக்கும் (குற்ற எண்-775/06) நிலுவையில் உள்ளதை அவரது வேட்புமனு சுட்டிக்காட்டுகிறது.

ஆயிரம் விளக்குத் தொகுதியின் வாக்காளர்கள் இரண்டு வேட்பாளர்களையும் எடைபோட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

சிந்திப்பீர்!
வாக்களிப்பீர்!!
நமது சின்னம் உதயசூரியன்!!!

Wednesday, March 30, 2011

தா.பாண்டியன் : அன்றும் இன்றும்

ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காவல்துறை வாகனங்களிலேயே பணத்தை கடத்தி செல்கின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இன்று ஜெயலலிதாவை பாண்டியன் பாதபூசை செய்து கொண்டிருக்கிறார்.ஆகவே அவர் இப்படியெல்லாம் ஜெயலிதாவை புகழ்ந்து கலைஞர் ஆட்சியை இகழ்ந்து பேசுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செரீனா என்ற இளம்பெண்ணின் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டது.செரீனா கஞ்சா விற்றதாக போடப்பட்ட அந்த வழக்கின்போது செரீனா வீட்டில் புகுந்த போலீசார் 35 இலட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றி போலீஸ் வாகனத்தில் எடுத்துச் சென்றது.அந்தத் தொகை ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் சொந்தமானது என்றே போலீஸ் பறித்து சென்றதாக அன்றைய ஏடுகள் எல்லாம் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் செரீனா போட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதீமன்றம் செரீனா வீட்டில் போலீசார் கைப்பற்றி போலீஸ் வாகனத்தில் எடுத்துசென்ற பணம் செரீனவுக்கே சொந்தமானது.போலீசார் அந்த பணத்தை செரீனாவிடமே திருப்பித் தரவேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்தது.

ஊரார் வீட்டு பணத்தை முதலமைச்சருக்கு சொந்தமானது என்று பொய் குற்றம்சாட்டி காவல் வாகனத்தில் கைப்பற்றிச் சென்ற அதே போலீஸ் வாகனத்தின் மீதுதான் இன்று ஜெயலலிதாவின் கொத்தடிமை தா.பாண்டியன் குற்றம் சாட்டுகிறார்.

2006 -ஆம் தேர்தலின்போது எந்த தி.மு.க. கூட்டணியில் பாண்டியனின் கட்சி போட்டியிட்டதோ அப்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை ஆஹா,ஓஹோ என்று புகழ்ந்த இதே பாண்டியன் மேடைக்கு மேடை பேசியதை எல்லோரும் மறந்து இருப்பார்கள் என்று நினைக்கிறார் போலும் தா.பாண்டியன்.அன்று அவருக்கு தி.மு.க.  தேர்தல் அறிக்கை தேனாக இனித்தது.காரணம் தி.மு.க.விடம் இருந்து 10 சீட்டுகளை பிச்சை பெற்றிருந்தார்.அவர் இன்று ஜெயலலிதாவிடம் 10 சீட்டுகளை பிச்சையாகப் பெற்றுக் கொண்டார்.அதனாலேதான் தி.மு.க தேர்தல் அறிக்கையை கேலி செய்கிறார்.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஆஹா,ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்.இதனைத்தான் காலத்தின் கோலம் என்பார்கள்?"

Thursday, March 24, 2011

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள் 1971 முதல் 1976 வரை


தி.மு.க.ஆட்சியின் சாதனைகள்


1971 முதல் 1976 வரை
  •  
  • இந்தியாவிலேயே முதன்முதலாக கோவையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம்
  •  அரசு ஊழியர் குடும்பப் பாது காப்புத் திட்டம்
  •  அரசு அலுவலர் இரகசியக் குறிப் பேட்டு முறை ஒழிப்பு
  •  மீனவர்களுக்கு இலவச வீட்டுவசதித் திட்டம்
  •  சிறார்களுக்கு ஆலயங்களில் கருணை இல்லங்கள்
  •  சேலம் உருக்காலைத் திட்டம்
  •  15 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று நில உச்ச வரம்புச் சட்டம்
  •  நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கம் - மின் திட்டம்
  •  தூத்துக்குடி ரசாயன உரத் தொழிற்சாலை
  •  சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ)
  •  சிப்காட் வளாகங்கள்
  •  தமிழ் பேசும் முஸ்லிம்களைப் போலவே உருது பேசும் முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்
  •  புன்செய் நிலவரி அறவே நீக்கம்
  •  மக்கள் குறை தீர்க்கும் மனுநீதித் திட்டம்
  •  பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்
  •  கொங்கு வேளாளர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்
  •  பசுமைப் புரட்சித் திட்டம்.

Wednesday, March 23, 2011

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள் 1969 முதல் 1971 வரை

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள்
1969 முதல் 1971 வரை

  • பேருந்துகள் நாட்டுடைமை
  • போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்
  • அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்
  • 1,500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைகள் திட்டம்
  • குடிசை மாற்று வாரியம்
  • குடிநீர் வடிகால் வாரியம்
  • கண்ணொளி வழங்கும் திட்டம்
  • பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்
  • கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள்
  • ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம்
  • தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்
  • குடியிருப்பு மனை மற்றும் பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டங்கள்
  • இந்தியாவிலேயே முதன்முதலாக காவலர் ஆணையம்  அமைத்தது
  • பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த் தப்பட்டோருக்கும் தனித்தனியாக அமைச்சகம்
  • பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டி லிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை 16  விழுக்காட்டி லிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தியது
  • புகுமுக வகுப்பு வரையில் அனை வருக்கும் இலவசக் கல்வி
  • மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை
  • நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை

Tuesday, March 22, 2011

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள் 1967 முதல் 1969 வரை

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள்
1967 முதல் 1969 வரை
  • "மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு "தமிழ்நாடு"என்ற பெயர்
  • சுயமரியாதைத் திருமணச் சட்டம்
  • தமிழ்,ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழித் திட்டம்
  • அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பைச் சரணளித்து ஈடான ஊதியம் பெறும் "ஈட்டிய விடுப்பு சரணளிப்பு"திட்டம்

                                                                                                                                         தொடரும்..

தலைவர் கலைஞர் நிகழ்சிகள்

 23 -3 -2011
மாலை 6 மணி - திருவாரூர்
தேர்தல் பிரசாரத் தொடக்க விழாப் பொதுக்கூட்டம்
 
24 -3 -2011
காலை 11 மணி திருவாரூர் வேட்பு மனுத் தாக்கல்
மாலை 6 மணி - தஞ்சாவூர்
தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
25 -3 -2011

மாலை 6 மணி  திருச்சி
தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம்.

திருவாரூரில் கலைஞர் பிரச்சாரம்.

திருவாரூரில்  தலைவர் கலைஞர்  உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், நாளை (புதன்கிழமை 23 -03 -11) அன்று  நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் நாளை பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார். இதற்காக திருவாரூரில் தெற்கு வீதியில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு மாவட்ட எல்லையான குமாரமங்கலத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

"திமுக Vs அதிமுக" நேரடி மோதல்!

சட்டசபைத் தேர்தலில் திமுக 119 இடங்களிலும், அதிமுக 160 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இதில் திமுகவும் அதிமுகவும் 84 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதன் விவரம்:


தொகுதிகள் -திமுக வேட்பாளர்-அதிமுக வேட்பாளர்


1. ஆயிரம் விளக்கு- அசன்முகமது ஜின்னா - பா.வளர்மதி
2. சைதாப்பேட்டை- மகேஷ்குமார் - செந்தமிழன்
3. ஆர்.கே.நகர்- பி.கே.சேகர்பாபு - வெற்றிவேல்
4. கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் - சைதை துரைசாமி
5. வில்லிவாக்கம்- க.அன்பழகன் - ஜே.சி.டி.பிரபாகரன்
6. பொன்னேரி (தனி)-மணிமேகலை - பொன்.ராஜா
7. திருவள்ளூர்- இ.ஏ.பி.சிவாஜி - பி.வி.ரமணா
8. அம்பத்தூர்- ப.ரங்கநாதன் - எஸ்.வேதாச்சலம்
9. மாதவரம்- டாக்டர் கனிமொழி - வி.மூர்த்தி
10.திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி - கே.குப்பன்
11. பல்லாவரம்- தா.மோ.அன்பரசன் - ப.தன்சிங்
12. தாம்பரம்- எஸ்.ஆர்.ராஜா - சின்னையா
13. உத்திரமேரூர்- பொன் குமார் - வாலாஜாபாத் கணேசன்
14. காட்பாடி- துரைமுருகன் - எஸ்.ஆர்.கே.அப்பு என்ற ராதாகிருஷ்ணன்
15. ராணிப்பேட்டை- ஆர்.காந்தி - முகம்மத்ஜான்
16. திருப்பத்தூர்- எஸ்.ராஜேந்திரன் - கே.ஜி.ரமேஷ்
17. திருவண்ணாமலை- ஏ.வ.வேலு - எஸ்.ராமச்சந்திரன்
18. கீழ்பெண்ணாத்தூர்- கு.பிச்சாண்டி - ஏ.கே.அரங்கநாதன்
19. வந்தவாசி (தனி)- கமலக்கண்ணன் - செய்யாமூர் குணசீலன்
20. வானூர் (தனி)- புஷ்பராஜ் - ஜானகிராமன்
21. விழுப்புரம்- க.பொன்முடி - சி.வி.சண்முகம்
22. சங்கராபுரம்- உதயசூரியன் - மோகன்
23. கடலூர்- புகழேந்தி - எம்.சி.சம்பத்
24. குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - சொரத்தூர் ராஜேந்திரன்
25. திருவிடைமருதூர்- கோவி.செழியன் - பாண்டியராஜன்(தனி)
26. கும்பகோணம்- க.அன்பழகன் - ராம.ராமநாதன்
27. திருவையாறு- கல்லணை செல்லக்கண்ணு - ரத்தினசாமி
28. தஞ்சாவூர்- எஸ்.என்.எம்.உபயதுல்லா - எம்.ரங்கசாமி
29. ஒரத்தநாடு- மகேஷ் கிருஷ்ணசாமி - வைத்திலிங்கம்
30. மன்னார்குடி- டி.ஆர்.பி.ராஜா - சிவா.ராஜமாணிக்கம்
31. திருவாரூர்- மு.கருணாநிதி - குடவாசல் ராஜேந்திரன்
32. நன்னிலம்- இளங்கோவன் - ஆர்.காமராஜ்
33. ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த் - ஜெ.ஜெயலலிதா
34. திருச்சி மேற்கு- கே.என்.நேரு - மரியம்பிச்சை
35. திருச்சி கிழக்கு- அன்பில் பெரியசாமி - ஆர்.மனோகரன்
36. மணச்சநல்லூர்- என்.செல்வராஜ் - டி.பி.பூனாட்சி
37. துறையூர் (தனி)- பரிமளா தேவி - இந்திராகாந்தி
38. பெரம்பலூர் (தனி)- எம்.பிரபாகரன் - இளம்பை தமிழ்ச்செல்வன்
39. அரவக்குறிச்சி- கே.சி.பழனிசாமி - வி.செந்தில்நாதன்
40. கிருஷ்ணராயபுரம்- பெ.காமராஜ் - எஸ்.காமராஜ்(தனி)
41. குளித்தலை- மாணிக்கம் - பாப்பாசுந்தரம்
42. கந்தர்வக்கோட்டை- கவிதைப்பித்தன் - சுப்ரமணியன் (தனி)
43. விராலிமலை- எஸ்.ரகுபதி - டாக்டர் விஜயபாஸ்கர்
44. ஏற்காடு (தனி)- தமிழ்செல்வன் - பெருமாள்
45. சங்ககிரி- வீரபாண்டி ஆறுமுகம் - விஜயலட்சுமி பழனிச்சாமி
46. சேலம்- தெற்கு எஸ்.ஆர்.சிவலிங்கம் - எம்.கே.செல்வராஜ்
47. வீரபாண்டி- வீரபாண்டி ராஜேந்திரன் - எஸ்.கே.செல்வம்
48. சேலம் மேற்கு- இரா.ராஜேந்திரன் - ஜி.வெங்கடாஜலம்
49. ராசிபுரம் (தனி)- வி.பி.துரைசாமி - ப.தனபால்
50. குமாரபாளையம்- வெப்படை செல்வராஜ் - பி.தங்கமணி
51. பாப்பிரெட்டிபட்டி -முல்லைவேந்தன் - பழனியப்பன்
52. மேட்டுப்பாளையம்- அருண்குமார் - சின்னராஜ்
53. கவுண்டம்பாளையம்- சுப்ரமணியன் - ஆறுக்குட்டி
54. கோவை வடக்கு- வீரகோபால் - மலரவன்
55. கோவை தெற்கு- பொங்கலூர் பழனிசாமி - சேஞ்சர் துரை
56. கிணத்துக்கடவு- மு.கண்ணப்பன் - செ.தாமோதரன்
57. தாராபுரம் (தனி)- ஜெயந்தி - பொன்னுசாமி
58. திருப்பூர் வடக்கு- கோவிந்தசாமி - எம்.எஸ்.எம்.ஆனந்தன்
59. மடத்துக்குளம் -மு.பெ.சாமிநாதன் - சண்முகவேலு
60. அந்தியூர்- என்.கே.கே.பி.ராஜா - எஸ்.எஸ்.ரமணிதரன்
61. மேலூர்- ராணி ராஜமாணிக்கம் - ஆர்.சாமி
62. மதுரை கிழக்கு- மூர்த்தி - தமிழரசன்
63. திருமங்கலம்- மணிமாறன் - ம.முத்துராமலிங்கம்
64. மதுரை மேற்கு தளபதி - செல்லூர் ரா ஜு
65. பழனி செந்தில்குமார் - வேணுகோபாலு
66. ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி - பாலசுப்பிரமணி
67. நத்தம்- விஜயன் - இரா.விஸ்வநாதன்
68. ஆண்டிபட்டி- எல்.மூக்கையா - தங்க தமிழ்செல்வன்
69. போடிநாயக்கனூர்- லட்சுமணன் - ஓ.பன்னீர்செல்வம்
70. முதுகுளத்தூர்- சத்தியமூர்த்தி - மு.முருகன்
71. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் - ராஜகண்ணப்பன்
72. மானாமதுரை (தனி)- தமிழரசி - குணசேகரன்
73. ராஜபாளையம்- தங்கபாண்டியன் - கே.கோபால்சாமி
74. சாத்தூர்- கடற்கரை ராஜ் - உதயகுமார்
75. சிவகாசி- வனராஜா - உதயகுமார்
76. அருப்புக்கோட்டை- சாத்தூர் ராமச்சந்திரன் - வைகைச்செல்வன்
77. சங்கரன்கோவில்- உமாமகேஸ்வரி - சொ.கருப்பசாமி (தனி)
78. ஆலங்குளம்- பூங்கோதை - பி.ஜி.ராஜேந்திரன்
79. திருநெல்வேலி- ஏ.எல்.எஸ்.லட்சுமணன் - நயினார் நாகேந்திரன்
80. அம்பாசமுத்திரம்- ஆவுடையப்பன் - இசக்கி சுப்பையா
81. தூத்துக்குடி- கீதா ஜீவன் - ஏ.பால்
82. திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன் - பி.ஆர்.மனோகரன்
83. கன்னியாகுமரி- சுரேஷ்ராஜன் - கே.டி.பச்சைமால்
84. நாகர்கோவில்- மகேஷ் - நாஞ்சில் முருகேசன்.

Monday, March 21, 2011

விஜயகாந்துக்கு எதிராக நடிகர் வடிவேலு

விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.    புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார்.   அந்த முடிவில் இப்போது கொஞ்சம் மாறுதல்.விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.வரும் 23ம் தேதி முதல் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.பொதுவாக திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்.  குறிப்பாக தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து அக்கட்சியை தோற்கடிக்க சபதம் ஏற்றுள்ளார்.
இதையடுத்து நடிகர் வடிவேலு இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

அன்பு சகோதரியின் அன்பு : வைகோவுக்கு ஜெயலலிதா கடிதம்

கேட்ட சீட் தராமல் அவமானப்படுத்தியதால் அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்யிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளது மதிமுக.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வைகோவுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,  ‘’மதிமுக நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் உரிமை வைகோவுக்கு உள்ளது.  தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் முடிவு  எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. முடிவு எப்படி இருந்தாலும் அன்புச்சகோதரியின் அன்பும், நன்மதிப்பும்  எப்போதும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

'நான் பாப்பாத்திதான்' என்று சட்டமன்றத்திலேயே கூறிய ஜெயலலிதாவின் பக்கமா?

 நாள்,வார ஏடுகள் சிலவற்றை எடுத்துக் கொள்வோம். தினமலர், தினமணி, ஆனந்த வ்கிடன்,ஜூனியர் விகடன்.குமுதம் ரிப்போர்ட்டர்,துக்ளக்,கல்கி முதலான சில ஏடுகள் தொடர்ந்து தி.மு.க.வையும்,திராவிட இயக்கத்தையும்,கலைஞரையும் தாக்கி எழுதி வருகின்றன.எப்படியாவது மீண்டும் ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்று துடிக்கின்றன.என்ன காரணம்?
 
மேலே குறிப்பிடப்பட்ட ஏடுகளின் வரிசையை மீண்டும் ஒருமுறை உற்று கவனித்தால் உண்மை புரியும்.அனைத்து ஏடுகளின் ஆசிரியர்களையும் ஒரு 'நூல்' இணைப்பது தெரிகிறதா?அந்த நூலுக்குப் 'பூணூல்'என்று பெயர்.தினமலர் ரமேஷ்,தினமணி வைத்தியநாதன்,விகடன் சீனிவாசன்,ரிப்போர்ட்டர் வரதராஜன்,துக்ளக் சோ,கல்கி ராஜேந்திரன் அனைவரும் பார்ப்பனர்கள்.அவாள் அனைவரும் ஒன்றுகூடி,அவாளில் ஒருவரைத் தமிழக முதல்வராக ஆக்க விரும்புவது இயல்புதானே!
 
அவர்களிடம் உள்ள 'இனப்பற்று' நம்மிடம் இல்லையே என்பதுதான் வேதனைக்குரியது.பார்ப்பனர் ஒருவரே முதலமைச்சராக வேண்டும் என்று அவர்கள் விரும்போது,'தமிழாய்ந்த தமிழன்தான் தமிழகத்தின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்'என்று நாம் விரும்பக்கூடாதா?
 
இது வெறும் தேர்தல் மட்டுமன்று.ஒரு வகையான சித்தாந்தப் போரும் ஆகும்.எனவேதான் இதனை ஆரிய திராவிடப் போர் என்கிறோம்  நாம்.'ஆம் இது ஒரு பரம்பரை யுத்தம்' என்று ஜெயலலிதாவும் ஒப்புக்கொள்கிறார். இந்தப் போரில் நாம் எந்தப் பக்கம்?
 
'நான் பெரியாரின் விரல் பிடித்து நடந்தவன்' என்று கூறும் கலைஞரின் பக்கமா?'நான் பாப்பாத்திதான்' என்று சட்டமன்றத்திலேயே கூறிய ஜெயலலிதாவின் பக்கமா?
 
பத்தாம் வகுப்பு வரை,தமிழைக் கட்டாயப் பாடமாக்கியதோடு,பொறியியல் கல்லூரிகளிலும்,தமிழ்வழிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய கலைஞரின் பக்கமா?ஆங்கிலக் கல்விதான் சிறந்தது என்று அறிக்கைவிட்ட  ஜெயலலிதாவின் பக்கமா?
 
தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னிரிமை வழங்கப்பட்டிருப்பது கலைஞர் அரசில்தான்.இது தமிழுக்கும்,தமிழருக்கும் பொற்காலம் என்று ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களே பாராட்டுவதைப் பார்க்கின்றோம்.
 
மேலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழின் பெருமையை உலகறியச் செய்த கலைஞரின் பக்கமா?கண்ணகி  சிலையை  கூட, காணாமல்  அடித்த  ஜெயலலிதாவின் பக்கமா?
 
தமிழறிஞர்களின் நூல்களையெல்லாம் தொடர்ந்து நாட்டுடைமை  ஆக்கி வரும் கலைஞரின் பக்கமா?தமிழின உணர்வாளர்களையும்,தமிழ் அறிஞர்களையும் சிறையில் அடித்த ஜெயலலிதாவின் பக்கமா?
 
இஸ்லாமியப் பெருமக்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடும்,அருந்ததியப் பெருமக்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கிய கலைஞரின் பக்கமா?சிறுபான்மையினருக்கு ஆந்திர அரசு இட ஒதுக்கீடு  வழங்கியதையே  கொச்சைப்படுத்திப் பேசிய ஜெயலலிதாவின் பக்கமா? 
 
இவை போன்ற ஆயிரம் உண்மைகளை உலகுக்குச் சொல்லவேண்டிய ஊடகங்கள் தவறான பரப்புரைகளின் ஆகலாமா? ஆகவே
சிந்திப்பீர்!
வாக்களிப்பீர்!!
நமது சின்னம் உதயசூரியன்!!!
 

Tuesday, March 1, 2011

தமிழக சட்டசபை தேர்தல் தேதி : ஏப்ரல்-13

 தமிழகம், புதுச்சேரி,கேரளம்,  மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின்  தேர்தல் தேதியை  டெல்லியில் இன்று மாலை  தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்தார்.தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே-16ம் தேதியுடன் முடிவடைகிறது.   இந்நிலையில் தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் -13 ம் தேதி ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார். தமிழகத்தில் மார்ச் 19ம் தேதிவேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும்,  மே-13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தார். தமிழகத்தின் மொத்த வாக்குச்சாவடிகள் 54 ஆயிரம்.   தமிழகத்தில்  மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 59 லட்சம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.