Tuesday, December 28, 2010

ஜெயலலிதா ஒரு ஜில்லாகேடி.


ஜெயலலிதா  ஆட்சிக்கு வந்த நாள் முதல்,காவல்துறையின் அத்துமீறல்களைப் பத்திரிகைகள் படம் பிடித்து காட்டியிருந்தன.இதன் காரணமாக பத்திரிக்கைகளை பழி தீர்க்கும் நாளை ஜெ.வின் காவல்துறை எதிர்நோக்கியிருந்தது.இறுதியில் பத்திரிகையாளர்களை 'கவனிக்க',கலைஞர் கைதைக் கண்டித்து தி.மு.க.. கண்டனப் பேரணி நடத்திய ஆகஸ்டு 12 சரியான நாளாகக் குறிக்கப்பட்டது.அது திட்டமிடப்பட்ட தாக்குதல்தான் எனக் கூறுவதற்கு ஏராளமான நிகழ்வுகள் நடந்தேறியதாக பத்திரிகையாளர்களே கூறுகின்றனர்.12 -8 -2001 அன்று இலட்சக்கணக்கான தி.மு.க.வினர் கலந்துகொண்ட கண்டனப் பேரணியில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது ஜெ.வின் காவல்துறையும்,ரவுடிப் பட்டாளமும்.ரவுடிகளைத் தவிர்த்துப் பொதுமக்கள்,தி.மு.க.வினர்,பத்திரிகையாளர்கள்,என அனைத்துதரப்பினரையும் தாக்கத் தொடங்கியது ஜெ.வின் காவல்துறை."எங்க கமிஷனர் பத்தி நீங்கதானே எழுதினீங்க?"என்று கேட்டுகொண்டே 'நக்கீரன்' நிருபர் அன்புவைத் தாக்கியது ஜெ'வின் காவல்துறை.தி.மு.க.+ பத்திரிகையாளர்கள் கூட்டணியை,ரவுடி+காவல்துறைக் கூட்டணி தாக்குவதை 'ஆஜ் தக்' நிருபர் ஜெயஸ்ரீ படம் பிடித்ததைப் பார்த்த காவல்துறை,அவரது கன்னத்தில் அறைந்து,படம் பிடித்த வீடியோ காமிராவை பூட்ஸ் கால்களால் நொறுக்கித் தள்ளியது.கலவரத்தை படம் பிடித்த 'ஜீ' டி.வி.யின் ஒலிநாடாவை நிருபர் வித்தியா'விடமிருந்து பறிப்பதற்காக அவரை டி.ஜி.பி. அலுவலக சுற்று சுவரிலேயே வைத்துத் தாக்கியது ஜெ.வின் காவல்துறை.அதனைத் தடுத்த 'நக்கீரன்' நிருபர் பிரகாஷ் டி.ஜி.பி.அலுவலகத்திற்க்குள்ளேயே ஜெ.வின் காவல்துறையினால் துரத்தித் துரத்தித் தாக்கப்பட்டார்.'இந்து' நிருபர் ரகு,'ஜூனியர் விகடன்' நிருபர் விவேக் ஆகிய புகைப்பட கலைஞர்களை ரவுடி கும்பல் தாக்கத் தொடங்கியது.அவர்கள் ஜெ.வின் காவல் துறையினரிடம் தஞ்சம் தேட,காவல்துறையே அவர்களைக் காட்டிமிராண்டித் தனமாக தாக்கியபோது அதிர்ந்துபோன அவர்கள் உயிருக்குபயந்து டி.ஜி.பி.அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.அப்போது அவர்களது புகைப்பட கருவிகள் புகைப்பட சுருள்கள் என அனைத்தையும் பறிமுதல் செய்த ஜெ'வின் காவல்துறை,அவர்களை டி.ஜி.பி. அலுவலகத்திற்க்குள்ளேயே சிறை வைத்தது.இதன் மூலம் வெளியே த.மு.க.வினர் மீதும் பொதுமக்கள் மீதும் நடத்தப்படுகின்ற கொலைவெறித் தாக்குதல்கள் வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைக்க முயற்சித்தது.இவ்வளவு அளவில்லாத வன்முறையையும்,அடாவடித்தனங்களையும் ஜெ.வின் காவல்துறையும்,ரவுடிக் கும்பலும் இணைந்துதான் நடத்தின என்பதற்கு கலைஞர் ஆதாரங்களை வெளியிட்டார்.அனைத்து செய்திகளையும் பெரும்பாலான இதழ்கள் வெளியிட்டுருந்தன.ஜெ.வின் அடாவடி ஆட்சியில் நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான கொலைவெறித் தாக்குதலுக்கு இதுவரை நடந்திராத வகையில் சுதந்திர தினத்தன்றே - பத்திரிகையாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர்.தடியால் அடித்து மண்டையைப் பிளந்த ஜெ.வின் காவல்துறைக்கும் அதனைத் தூண்டிய ஜெ.விற்கும் உண்ணாவிரதம் மட்டுமே பதிலடியாகுமா?குறைந்தபட்சம் சனநாயக முறையில் அவர்களின் நிகழிச்சிகளையாவது புறக்கணிக்க வேண்டாமா?என்று பத்திரிகையாளர்களுக்காக மக்கள் எழுப்பிய கேள்வி ஏனோ அவர்களின் காதுகளில் விழவே இல்லை.
ஆனால் பார்ப்பனியத்தை துளிர்க்கச் செய்யமுயற்சிக்கும் அக்ரகாரத்து ஜெ.வுக்கு,அடிவாங்கினாலும் வழக்குப் போட்டாலும் வக்காலத்து வாங்குகின்றன சில பார்ப்பனிய ஏடுகள்."முதல்வர் பத்திரிகையாளர்களுக்கு எதிரியல்ல.முதல்வர் அருகிலேயே இருக்கும் ஒரி அதிகாரிதான்,முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்.கலவரத்தில் படுகாயமடைந்த நிருபர்களை முதல்வர் சந்திக்க எண்ணியபோது,அந்த அதிகாரிதான் தடுத்தார்"என்று கிசுகிசு எழுதி ஜெவை ஒன்னுந்தெரியாதவராக்க முயற்ச்சித்தது சில பார்ப்பன ஏடுகள்.அதனூடே 'பத்திரிக்கையாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டிகொடுக்கும் திட்டமெல்லாம் ஜெவிடம் இருக்கிறது'என எழுதி எச்சில் துண்டுகளுக்கு ஏங்கும் நாய்களாக பத்திரிகையாளர்களை மாற்றத் துடித்தது சில பார்ப்பன வெறிபிடித்த ஏடுகள்.  தி.மு.க. பேரணியில் காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு உயிரைக் காத்துக்கொள்ள அரசு மருத்துவமனைக்கு ஓடினால்.அங்கே சிகிச்சை அளிக்க அல்ல;சேர்த்துக்கொள்ளவே மறுத்தது ஜெ.அரசு.உடைந்த மண்டைகளோடும்,காய்ந்த இரத்தக் கறைகளோடும் உயிரை காத்துக்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டனர் பத்திரிகையாளர்கள்.
பத்திரிகையாளர்கள் மீதி இவ்வளவு ஒடுக்குமுறைகளை ஜெ.ஏவிவிட்டப் பிறகும்,பத்திரிகையாளர்களையும்,தி.மு.க.வினரையும் திட்டமிட்டுத் தாக்கியது ஜெ.வின் காவல்துறை + ரவுடிக் கூட்டணிதான் என்பதைப் பல புகைப்பட,ஒலிநாடா ஆதாரத்துடன் பத்திரிகையாளர்கள் வெளியிட்டனர்.ஆனால் அன்றைய காவல்துறை ஆணையர் முத்துகருப்பன்,தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அகங்காரத்தோடு பேசினார்.ஆனால் ஜெ.வோ தனக்கேயுரிய பாணியில் இன்னொரு படி மேலே போய் "பேரணிக் கலவரத்திலே காவல்துறையும் தாக்கப்பட்டுள்ளது அதையும் பத்திரிகையாளர்கள் அனுதாபத்தோடு எழுதவேண்டும்" என்று தனது ரவுடிக் கும்பலுக்கு,அடிபட்ட பத்திறிகையாளர்களிடமே அங்கீகாரம் தேடினார்.இதுபோன்று பத்திரிகையாளர்களை குறி வைத்து திட்டமிட்டுத் தாக்கியது கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வாக இருக்கக் கூடும். இப்படி அடுக்கிகொண்டே போகலாம் ஒவ்வொரு நிகழ்வுகளையும்.இதையெல்லாம் மறந்துவிட்ட பத்திரிகையாளர்கள் இன்றும் எழுதுகிறார்கள்..ஜெயலலிதாவின் கையில் மீண்டும் உருட்டுகட்டை கொடுக்க!!




1 comment:

  1. அஹங்கரிகளை எல்லாம் ஆட்சியில் வைத்தால் இப்படிதான். ஜெயா ஒரு அஹோரி

    ReplyDelete