மக்கள் செல்வாக்குப் படைத்தவர் மட்டுமே அரசியலில் நீண்ட காலம் நிலைத்திருப்பார்.அதுதான் மக்களாட்சியின் சிறப்பம்சம்.அச்சிரப்புக்குரிய மக்கள் செல்வாக்கு என்பது ஒருவருக்கு எளிதில் கிடைத்துவிடாது.கடின உழைப்பும்,பல்நோக்கு திட்ட சிந்தனையும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவ சிந்தனையும் தனிமனித சுதந்திரத்தின் மீதான பொறுப்புணர்வும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு அரசியல்வாதிக்குதான் மக்கள் செல்வாக்கு அமையும் அப்படியான தலைவர்களாகத் தான் பெரியார்,அண்ணா,காமராசர் போன்றவர்கள் திகழ்ந்தார்கள்.இன்று அவர்களின் அடியொற்றிப் பின்பட்ட்ருகிறார் கலைஞர் .ஆனால் மக்கள் செல்வாக்கு என்றால் என்னவென்றே தெரியாமல் சில தற்குறி மனிதர்களும் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் யார்?இவர்களின் ஆதி அந்தம் என்ன?இவர்களின் நோக்கம் என்ன?என்றெல்லாம் ஆராய்ந்தால் நகைச்சுவையான செய்திகளே கிடைக்கும்.இப்படியானவர்களை ஊடகத்துறையினர் 'பொலிடிகல் ஜோக்கர்' என்றே கருதி அவர்களின் செய்திகளுக்கும் கொஞ்சம் இடம் ஒதுக்கிவிடுகிறார்கள்.ஆனால் குளத்தில் விழுவது மண்ணாங்கட்டியா?வைரக்கல்லா?எதுவாக இருந்தாலும் குலத்தின் அமைதி கெட்டது கெட்டது தானே,என ஊடகத்தினர் நினைப்பதே இல்லை.அப்படிதான் தமிழ்நாட்டு அரசியலில் சுபிரமணியன்சாமி என்னும் மண்ணாங்கட்டி அவ்வபொழுது விழும்.பின் தானாகவே கரைந்துவிடும்.ஜெயலலிதாவும்,சுபிரமணியன்சாமியும் மரபு வழி உறவினர்கள்.இருவருமே உழைத்து முன்னேறிய அரசியல்வாதிகள் அல்லர்.சில நேரங்களில் இவர் அவரை திட்டுவார்.அவர் இவரை திட்டுவார்.எப்போது இவர்களுக்குள் சண்டை ?எப்போது சமாதானம் என்பதையே யாராலும் கண்டுணர முடியாது.ஒரு சமயம் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரிலோ அல்லது அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகவோ அ.தி.மு.க. மகளிரணியினர் சுபிரமணியன் சாமியின் எதிரில் நின்றுகொண்டு புடவைகளைத் தூக்கிகாட்டிய சம்பவம் கூட நடந்தது.அதையெல்லாம் சாமி ரெம்பதான் ரசித்திருப்பார் போலிருக்கிறது.அதனால்தான் ஜெயலலிதா பாசம் அவரிடம் எப்போதுமே குடிகொண்டிருக்கிறது.சு.சாமி என்ற தனிமனிதரை பொறுத்தவரை ஒரு ஜாலி பேர்வழியாகத்தான் வாழ்கிறார்.அமைதியான ஆர்த்தடாக்ஸ் குடும்பம் அவருடையது என்றாலும் அடிக்கடி சென்ற வெளிநாடு பயணத்தால் தொற்றிகொண்ட கலாசாரத்தால் பாவம் சந்திரலேகா ஐ.ஏ..எஸ். விலகிப்போனார்.ஆடம்பர ஓட்டல்களில் தங்குவது,அடிக்கடி விமானப்பயணம்,உள்நாட்டு வெளிநாட்டு உளவு ஆட்களோடு நெருக்கம் காட்டுவது பெரும்பாலும் நீதிமன்ற மதிலுக்குள்ளேயே அரசியல் செய்வது,செலவுக்கு தேவைப்படும் பணத் தொகைக்காக அரசியல் ரீதியான புரோக்கர் வேலை பார்ப்பது இதுவேல்லாம்தான் சுவாமியின் அன்றாட வாழ்க்கைமுறை.ஜெயலலிதா தன்னை ஒரு வெளிப்படையான சாதி வெறியராக தலித் விரோதியாக பல சமயம் வெளிப்படுத்தியிருக்கிறார்.மறைந்த முன்னாள் அமைச்சர் அருணாச்சலம் ஒரு தலித் என்பதால் அவரோடு ஒரே விமானத்தில் பயணம் செய்ய மறுத்து அடம்(மதம்) பிடித்து அடுத்த விமானத்தில் பரந்தவர்தான் அம்மையார்.ஆனால் சு.சாமி போன்றவர்களோ அம்மையாரைவிட அபாயகரமானவர்களாகவே விளங்குகிறார்கள்.ராஜீவ்காந்தி கொலையில் சந்திரசாமி என்பவர் தீவிரமாக சந்தேகிக்கப்பட்டார் அவரோடெல்லாம் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் சுபிரமணியன் சாமி.இவரின் பின்னால் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த மர்மம் இருக்கிறது.அந்த மர்மம்தான் இந்த கோமாளியை வழிநடத்துகிறது,காப்பாட்ட்ருகிறது.ஜெயலலிதாவின் இலங்கைத்தமிழர் நிலைபாடு என்பது சு.சாமியின் வழிகாட்டுதலின்படி அமைந்ததுதான்.அதனால்தான் போர் என்றால் பொதுமக்களும் சாகத்தான் செய்வார்கள் என்று ஒரே போடாகப் போட்டார் ஜெயலலிதா.எங்காவது யாராவது புலி என்றால் சாமிக்கு கிளியாகிவிடுகிறது.புலிக்கு எதிரான சில பாயிண்ட்களோடு அங்கே ஆஜராகிவிடுகிறார்.அவருக்கு இது தேவையில்லாத வேலையென சிலர் சலித்துகொன்டாலும் "புலி"விவகாரம் ஏதோ ஒன்றில் சாமி வகையாக மாட்டிக்கொண்டிருக்கிறார் என்பதாலேயே மனிதர் உஷாராகி தலையை நுழைத்து குழப்பமாக ஏதாவது பேசி பிறரின் கவனங்களை திசை திருப்பி விடுகிறார்.சோனியாகாந்தியை வாய்க்கு வந்தபடியெல்லாம் வசைபாடியவர்கள் ஜெயலலிதா-சுபிரமணியசாமி ஜோடி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.தான் மிகவும் அழகானவர் என்றும் சோனியாவின் முகவெட்டு அஷ்ட்ட கோணலாக இருப்பதாகவும்.இவளிடம் எப்படி ராஜீவ் கவிழ்ந்தார் என்றெல்லாம் மட்டமான கமெண்ட் அடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.ராஜீவின் காதலி அவர் காதலுக்கு தோலோ,நிறமோ,தேசமோ முக்கியமில்லை என்ற பரவச நிலையை உணர்ந்தவர் என்றெல்லாம் என்றெல்லாம் கூட கமெண்ட் அடித்ததாக கேள்விபட்டிருக்கிறோம்.அவரின் மன உணர்வுகள் ராகுல் காந்தி போன்ற சிறு பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.என்னதான் இருந்தாலும் தன் மகனிடம் தன் காதல் அனுபவங்களை எந்தத் தேசத்துத் தாயும் பகிர்ந்துகொள்ளமாட்டாள்.தாய்மை அன்பு என்பது வேறு.காதல் பரவசம் என்பது வேறு.அத்தகைய உணர்வில்தான் உளவியல் ரீதியாக போர் தொடுத்தனர்.ஜெயலலிதாவும்,சுபிரமணியன் சாமியும்,இன்றோ சொரனைகேட்டு வெட்கமின்றி சோனியாவிடம் அரசியல் அரசியல் பிச்சை கேட்டு கையேந்தி நிற்கின்றனர்.இவர்கள் பிச்சை எடுப்பதற்கு ஒரு கோஷம் தேவைபடுகிறது.ராப்பிச்சைக்காரன் ஒரு மாதிரியாக குரல் கொடுப்பான்,பகல் பிச்சைக்காரன் ஒருமாதிரியாக குரல் கொடுப்பான்,பிச்சைக்காரன் மாற்றுதிறனாளியாக இருக்கும்பட்ச்சத்தில் தன் நிலையை விளக்கி பிச்சை கேட்ப்பார்.ஆனால் ஜெயலலிதா,சுபிரமணிய சாமிக்கும் பிச்சை கேட்க அகப்பட்ட கோஷம்தான் ௨ ஸ்பெக்ட்ரம்.மேலும் இவர்களுக்கு வசதியாக இந்த விவகாரத்தின் முக்கிய நபராக விளங்கும் ராசா,தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.அதனாலேயே இந்த அவாள் கோஷ்டிக்கு மிக வசதியாக போய்விட்டது.ராசாவை கைது செய்ய வேண்டுமாம்,காங்கிரசோடு கூட்டு வேண்டுமாம்.௧௮ எம்.பி.க்கள் யாவர்களிடம் இருக்கிறார்களாம்,காங்கிரஸ் அரசு கவிழாமல் காப்பார்களாம்,சோனியாவின் முகம் அசிங்கமாக இருந்தாலும் பரவாயில்லையாம்,கம்யூனிஸ்ட் வெளியேறினாலும் பரவாயில்லையாம்.மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவன் என்பது டார்வின் கொள்கை.அதை டெமோ காட்ட ஜெயலலிதாவையும்,சு.சாமியும் விட்டால் வேறு ஆளில்லை என்றே அடிக்கடி நிரூபிக்கிறார்கள்.
No comments:
Post a Comment