Monday, December 20, 2010

பிராமணர்கள் அல்லாத பிற சமூகத்து மககளுக்கும் சமூக நீதி பெற்று தந்தது திராவிட இயக்கங்களே!!!

திராவிட இயக்க வரலாற்றில் சமூகநீதி போராட்டம் மிக முக்கியமானது ஆகும்.சமூகநீதியை கம்யூனல் ஜி.ஒ.,வகுப்புவாரிபிரதிநிதித்துவம்,வகுப்புரிமை,
ரிசர்வேஷன்,இடஒதுக்கீடு எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர்.சமூகநீதி
என்பது ஒரு வகுப்பாரைத் தாழ்த்தியோ,அச்சுறுத்தியோ பெறும் சலுகையல்ல.ஒவ்வொரு வகுப்பும் அரசியல்,கல்வி,வேலை வாய்ப்புகளில்,இடம் பெறவேண்டிய உரிமை;அதாவது பிறப்புரிமை ஆகும்.ஆகவேதான் சமூகநீதி ஒரு காலகட்டத்தில் 'வகுப்புரிமை'எனக் கூறப்பட்டது.இந்த வகுப்புரிமையை தோற்றுவித்தவர்கள் ஆங்கிலேயர்களே.அதனை திராவிட இயக்கம் வளர்த்தெடுத்தது.
டாக்டர்.நாயர் தொடங்கி முதல்வர் கலைஞர் வரை சமூக நீதிக்காக போராடியவர்களே! இன்னமும் அந்தப் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.இப்போராட்ட வரலாற்றில் பிட்டி தியாகராயர்,டாக்டர் டி.எம்.நாயர்,டாக்டர்.சி.நடேசனார்,முத்தைய்யா முதலியார்,பெரியார்,
அறிஞர் அண்ணா,தலைவர் கலைஞர் ஆகியோர் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள் ஆவர்.இவர்களுள் தலைவர் கலைஞர்க்கென்று மிகச் சிறப்பான இடமுண்டு.ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்,பெருந்தலைவர் காமராசர் ஆகியோருக்கும் சமூகநீதித் தளத்தில் பங்குண்டு.
சமூகநீதியின் தொடக்கம்:
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தபோது ஆங்கிலேயர்கள் குறைவான தொகையினர்,ஆளப்படும் இந்தியர்கள் தொகையில் அதிகம்.மிகப்பலராக இருந்த இந்தியர்களுக்கு அரசுப் பணிகளில் இடமே இல்லை என்கிற நிலை,அவர்களுக்கு வெறுப்பையும் அதிருப்தியும் தந்தது.சொந்த நாட்டவர்க்கு ஏதோ சில பணிகளைத் தர ஆங்கிலேயர் முன்வந்தனர்.இப்படித் தரப்பட்ட பணிகள் எல்லாவற்றையும் 
பிராமணர்களே பெற்றனர். 
1853இல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 49 பேர்-ஒரே சாதியை சேர்ந்தவர்கள் நெல்லூர் மாவட்ட வருவாய்த் துறையை ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.இவர்கள் அனைவரும் பிராமணர்களே.1894 முதல் 1904 வரை நிர்வாகப் பணிகளிலும் சரி,தொழில் சார்ந்த பணிகளிலும் சரி,பிராமணர்களே அதிக இடங்களில் இருந்தனர்.இதனால் பிராமனரக்ல் அல்லாதிரிடயே எதிர்ப்புகள் மெல்ல எழுந்து அது ஆங்கிலேயர்களுடைய செவிகளிலும் விழத் தொடங்கியது.
ஆங்கிலேயர்களுக்கு இந்திய சமூக அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லை.இங்கே வர்ண பேதமும் சாதீயமும் உள்ளதை அவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலவில்லை.எல்லோரையும் அவர்கள் 'இந்தியர்கள்' என மட்டுமே கருதினர்.பின்னர்,அவர்கள் பிராமணர்கள் உயர்சாதியினர் என்றும்,அவர்கள் மிகச் சிறுபான்மையினர் என்றும்,சிறுபான்மையினராக இருப்பவர்கள் அரசுப் பணிகளில் அதிகமாக இடம்பெற்று ஆதிக்கம் செய்திவருகிரார்கள் என்றும் அறிந்து கொண்டார்கள்.இதனால் அந்த ஏகபோகத்தை ஒழிப்பதற்காக ஆங்கிலேயர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்கள்.இதற்காக ௧௮௫௪-இல் வருவாய் ஆணையம் ஒரு நிலை ஆணையை பிறப்பித்தது.அந்த ஆணையில் வாரியம்,"மாவட்ட ஆட்சியர்கள் சார்நிலைப் பணிகளைச் செல்வாக்கு படைத்த குடும்பங்கள் ஏகபோகம் ஆக்கிகொள்ளாமல் விழிப்போடு பார்த்துக் கொள்ளவேண்டும்"என்று அறிவுறுத்தியது.பல்வேறு சாதிகளுக்கு முதல் நிலைப் பணிகளைப் பிரித்தளிக்க முயற்ச்சிக்க வேண்டும் என்று நெறிப்படுத்தினர்.
1854-ஆம் ஆண்டு ஆணையைத் தொடர்ந்து 1857,1907ஆகிய ஆண்டுகளிலும் இத்தகைய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.ஆணைகளை பிறப்பித்த அரசு வாளாயிருக்கவில்லை.இந்த ஆணைகள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்தது.அவ்வாய்வில் ஆணைகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்பது தெரியலாயிற்று.இதன் மூலமாக பிராமணர்களின் மற்றொரு தந்திரம் வெளிப்பட்டது.பிராமணர்களில் பல பிரிவுகள் உண்டு.ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு சாதியினர் எனக் கூறி,பிராமணர்கள் பணிகளை அபகரித்து வந்தனர் என்பதும் தெரியவந்தது.இதன்பிறகு அரசு,'பிராமணர்களுக்குள்ளே பல பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் பிராமணர்களே.அவர்கள் அனைவரும் ஒரே சாதியினராகவே கருதப்படுவர்.அதன்படிதான் பனி நியமனங்களும் செய்யப்பட வேண்டும்' என்று சுற்றறிக்கைகளின் மூலமும் ஆணைகளின் மூலமும் தெளிவுபடுத்தியது.
இந்நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,அரசின் ஆணை 1854லேயே பிறப்பிக்கப்பட்டுவிட்டது.ஆங்கிலேயர்களும் வகுப்புரிமையைத் தானாக முன்வந்து ஆணையைப் பிறப்பிக்கவில்லை.கோரிக்கைகளை இப்போது வைப்பது போல,கட்சிகளோ,அமைப்புகளோ கேட்கவில்லை.அந்தந்த சாதியினர் தனித்தனி குழுக்களாக சென்று கோரிக்கைகளை எழுப்பினர்.அதன் விளைவாகவே அரசு ஆணைகளை பிறப்பித்தது.
ஆங்கில அரசு நிலைத்ததற்க்கு பிறகு விடுதலை உணர்ச்சி பெருகலாயிற்று.இதனால் புரட்சிகர இயக்கங்கள் தோன்றின.அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறப்போராட்டங்களை நடத்தவில்லை.அவர்கள் வன்முறையாளர்களாகவே இருந்தனர்.இதனால் அச்சமற்ற ஆங்கிலேயர்கள் சார்பில்,ஆங்கிலேய அரசு அறவழயாக கோரிக்கைகளை பெற்று நிறைவேற்ற ஓர் அமைப்பை உருவாக்கியது.அந்த அமைப்பே இந்திய தேசிய காங்கிரஸ்.இவ்வமைப்பு அதிகார மையங்களில் 'இந்திய மயமாக்க'வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தது.ஆங்கிலேயர்களும் இந்தியர்க்குப் பதவிகளை வழங்கினர்.ஆனால் அவை பிராமணர்களுக்கே போய் சேர்ந்தது.ஆகவே'இந்திய மயம்' என்றால்  'பிராமண மயம்'எனப் பொருளுரைத்து அதனை வெளிப்படுத்தியது-திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் கட்சியான நீதிக்கட்சி!அதுமட்டுமன்று ஆங்கிலேய அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள்.அக்கோரிக்கை இதுதான்:
"இந்தியர்கள் என்பவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல.இந்தியர்களுள் பிராமணர்கள் என்பவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரே.ஆகவே இந்தியர்களில் மிகப்பெரும்பான்மயினராக இருக்கும் பிராமணர் அல்லாதார்க்கு உரிய இடங்களை ஒதுக்கித் தாருங்கள்" என்பதுதான்.
                                                                                                                              (தொடரும்)





No comments:

Post a Comment