Tuesday, December 28, 2010

ஜெயலலிதா ஒரு ஜில்லாகேடி.


ஜெயலலிதா  ஆட்சிக்கு வந்த நாள் முதல்,காவல்துறையின் அத்துமீறல்களைப் பத்திரிகைகள் படம் பிடித்து காட்டியிருந்தன.இதன் காரணமாக பத்திரிக்கைகளை பழி தீர்க்கும் நாளை ஜெ.வின் காவல்துறை எதிர்நோக்கியிருந்தது.இறுதியில் பத்திரிகையாளர்களை 'கவனிக்க',கலைஞர் கைதைக் கண்டித்து தி.மு.க.. கண்டனப் பேரணி நடத்திய ஆகஸ்டு 12 சரியான நாளாகக் குறிக்கப்பட்டது.அது திட்டமிடப்பட்ட தாக்குதல்தான் எனக் கூறுவதற்கு ஏராளமான நிகழ்வுகள் நடந்தேறியதாக பத்திரிகையாளர்களே கூறுகின்றனர்.12 -8 -2001 அன்று இலட்சக்கணக்கான தி.மு.க.வினர் கலந்துகொண்ட கண்டனப் பேரணியில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது ஜெ.வின் காவல்துறையும்,ரவுடிப் பட்டாளமும்.ரவுடிகளைத் தவிர்த்துப் பொதுமக்கள்,தி.மு.க.வினர்,பத்திரிகையாளர்கள்,என அனைத்துதரப்பினரையும் தாக்கத் தொடங்கியது ஜெ.வின் காவல்துறை."எங்க கமிஷனர் பத்தி நீங்கதானே எழுதினீங்க?"என்று கேட்டுகொண்டே 'நக்கீரன்' நிருபர் அன்புவைத் தாக்கியது ஜெ'வின் காவல்துறை.தி.மு.க.+ பத்திரிகையாளர்கள் கூட்டணியை,ரவுடி+காவல்துறைக் கூட்டணி தாக்குவதை 'ஆஜ் தக்' நிருபர் ஜெயஸ்ரீ படம் பிடித்ததைப் பார்த்த காவல்துறை,அவரது கன்னத்தில் அறைந்து,படம் பிடித்த வீடியோ காமிராவை பூட்ஸ் கால்களால் நொறுக்கித் தள்ளியது.கலவரத்தை படம் பிடித்த 'ஜீ' டி.வி.யின் ஒலிநாடாவை நிருபர் வித்தியா'விடமிருந்து பறிப்பதற்காக அவரை டி.ஜி.பி. அலுவலக சுற்று சுவரிலேயே வைத்துத் தாக்கியது ஜெ.வின் காவல்துறை.அதனைத் தடுத்த 'நக்கீரன்' நிருபர் பிரகாஷ் டி.ஜி.பி.அலுவலகத்திற்க்குள்ளேயே ஜெ.வின் காவல்துறையினால் துரத்தித் துரத்தித் தாக்கப்பட்டார்.'இந்து' நிருபர் ரகு,'ஜூனியர் விகடன்' நிருபர் விவேக் ஆகிய புகைப்பட கலைஞர்களை ரவுடி கும்பல் தாக்கத் தொடங்கியது.அவர்கள் ஜெ.வின் காவல் துறையினரிடம் தஞ்சம் தேட,காவல்துறையே அவர்களைக் காட்டிமிராண்டித் தனமாக தாக்கியபோது அதிர்ந்துபோன அவர்கள் உயிருக்குபயந்து டி.ஜி.பி.அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.அப்போது அவர்களது புகைப்பட கருவிகள் புகைப்பட சுருள்கள் என அனைத்தையும் பறிமுதல் செய்த ஜெ'வின் காவல்துறை,அவர்களை டி.ஜி.பி. அலுவலகத்திற்க்குள்ளேயே சிறை வைத்தது.இதன் மூலம் வெளியே த.மு.க.வினர் மீதும் பொதுமக்கள் மீதும் நடத்தப்படுகின்ற கொலைவெறித் தாக்குதல்கள் வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைக்க முயற்சித்தது.இவ்வளவு அளவில்லாத வன்முறையையும்,அடாவடித்தனங்களையும் ஜெ.வின் காவல்துறையும்,ரவுடிக் கும்பலும் இணைந்துதான் நடத்தின என்பதற்கு கலைஞர் ஆதாரங்களை வெளியிட்டார்.அனைத்து செய்திகளையும் பெரும்பாலான இதழ்கள் வெளியிட்டுருந்தன.ஜெ.வின் அடாவடி ஆட்சியில் நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான கொலைவெறித் தாக்குதலுக்கு இதுவரை நடந்திராத வகையில் சுதந்திர தினத்தன்றே - பத்திரிகையாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர்.தடியால் அடித்து மண்டையைப் பிளந்த ஜெ.வின் காவல்துறைக்கும் அதனைத் தூண்டிய ஜெ.விற்கும் உண்ணாவிரதம் மட்டுமே பதிலடியாகுமா?குறைந்தபட்சம் சனநாயக முறையில் அவர்களின் நிகழிச்சிகளையாவது புறக்கணிக்க வேண்டாமா?என்று பத்திரிகையாளர்களுக்காக மக்கள் எழுப்பிய கேள்வி ஏனோ அவர்களின் காதுகளில் விழவே இல்லை.
ஆனால் பார்ப்பனியத்தை துளிர்க்கச் செய்யமுயற்சிக்கும் அக்ரகாரத்து ஜெ.வுக்கு,அடிவாங்கினாலும் வழக்குப் போட்டாலும் வக்காலத்து வாங்குகின்றன சில பார்ப்பனிய ஏடுகள்."முதல்வர் பத்திரிகையாளர்களுக்கு எதிரியல்ல.முதல்வர் அருகிலேயே இருக்கும் ஒரி அதிகாரிதான்,முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்.கலவரத்தில் படுகாயமடைந்த நிருபர்களை முதல்வர் சந்திக்க எண்ணியபோது,அந்த அதிகாரிதான் தடுத்தார்"என்று கிசுகிசு எழுதி ஜெவை ஒன்னுந்தெரியாதவராக்க முயற்ச்சித்தது சில பார்ப்பன ஏடுகள்.அதனூடே 'பத்திரிக்கையாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டிகொடுக்கும் திட்டமெல்லாம் ஜெவிடம் இருக்கிறது'என எழுதி எச்சில் துண்டுகளுக்கு ஏங்கும் நாய்களாக பத்திரிகையாளர்களை மாற்றத் துடித்தது சில பார்ப்பன வெறிபிடித்த ஏடுகள்.  தி.மு.க. பேரணியில் காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு உயிரைக் காத்துக்கொள்ள அரசு மருத்துவமனைக்கு ஓடினால்.அங்கே சிகிச்சை அளிக்க அல்ல;சேர்த்துக்கொள்ளவே மறுத்தது ஜெ.அரசு.உடைந்த மண்டைகளோடும்,காய்ந்த இரத்தக் கறைகளோடும் உயிரை காத்துக்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டனர் பத்திரிகையாளர்கள்.
பத்திரிகையாளர்கள் மீதி இவ்வளவு ஒடுக்குமுறைகளை ஜெ.ஏவிவிட்டப் பிறகும்,பத்திரிகையாளர்களையும்,தி.மு.க.வினரையும் திட்டமிட்டுத் தாக்கியது ஜெ.வின் காவல்துறை + ரவுடிக் கூட்டணிதான் என்பதைப் பல புகைப்பட,ஒலிநாடா ஆதாரத்துடன் பத்திரிகையாளர்கள் வெளியிட்டனர்.ஆனால் அன்றைய காவல்துறை ஆணையர் முத்துகருப்பன்,தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அகங்காரத்தோடு பேசினார்.ஆனால் ஜெ.வோ தனக்கேயுரிய பாணியில் இன்னொரு படி மேலே போய் "பேரணிக் கலவரத்திலே காவல்துறையும் தாக்கப்பட்டுள்ளது அதையும் பத்திரிகையாளர்கள் அனுதாபத்தோடு எழுதவேண்டும்" என்று தனது ரவுடிக் கும்பலுக்கு,அடிபட்ட பத்திறிகையாளர்களிடமே அங்கீகாரம் தேடினார்.இதுபோன்று பத்திரிகையாளர்களை குறி வைத்து திட்டமிட்டுத் தாக்கியது கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வாக இருக்கக் கூடும். இப்படி அடுக்கிகொண்டே போகலாம் ஒவ்வொரு நிகழ்வுகளையும்.இதையெல்லாம் மறந்துவிட்ட பத்திரிகையாளர்கள் இன்றும் எழுதுகிறார்கள்..ஜெயலலிதாவின் கையில் மீண்டும் உருட்டுகட்டை கொடுக்க!!




Friday, December 24, 2010

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கலைஞர் ஆட்சியில் நலத்திட்டங்கள் பாரீர்..ஜெயலலிதாவை என்ன செய்தார் எனக் கேட்பீர்..!


கலைஞரின் அரசில் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு செய்த சாரித்திர சாதனைகள்.
தாட்கோ
1.இந்தியாவிலேயே முதல் முதலாக தாழ்த்தப்பட்ட மக்களின் தரம் உயர்த்தப்பட வேண்டி 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆரம்பித்தார் (தாட்கோ) கலைஞர்.
உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு.
2.1996ஆம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்,பதவியில் அமர வேண்டும் எனக் கருதி உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு தந்து,
அதன்வழி பஞ்சாயத்து தலைவர்,யூனியன் சேர்மேன்,மாவட்ட சேர்மேன்,மாநகர மேயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்களை அமரவைத்து அழகு பார்த்தவர் கலைஞர்.
டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம்
3.1997ஆம் ஆண்டு அண்ணல் டாக்டர் அம்பேத்கார் பெயரில் இந்தியாவிலேயே முதன் முதலாக,அப்போது குடியரசு தலைவராக இருந்த மேதகு கே.ஆர்.நாராயணன் அவர்களை கொண்டு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்களைக்கழகத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் கலைஞர்.
அண்ணல் அம்பேத்கார் மணி மண்டபம்
4.தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக விளங்கிய அண்ணல் அம்பேத்காருக்கு மிகப்பெரிய அளவில் கலைஞரால் 4 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்துத் தந்தவர் கலைஞர்.
குடியரசுத் தலைவராக
5.1997இல் இந்திய குடியரசு தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திரு.கே.ஆர்.நாராயணன் அவர்களை  இந்திய துணைக் கண்டத்தின் முதல் குடிமகனாக நிர்ணயிக்கும் ஆற்றல் மிக்க தலைவராக விளங்கியவர் கலைஞர்.
6.நமது மாநிலம் மட்டுமல்ல.அயல் மாநிலமான மராட்டிய  மாநிலத்தில் மரத்வாடா பல்கலைகழகத்திற்கு டாக்டர் அம்பேத்கார் பெயர் சூட்ட சொல்லி அந்த மாநிலத்தில் போராட்டம் நடப்பதாக அறிந்து அக்கோரிக்கையை வலியுறுத்தி மராட்டிய கவர்னருக்கு ஒரு லட்சம் தந்திகள் தமிழ்நாட்டிலிருந்து கலைஞர் சார்பில் கொடுக்கப்பட்டு அதன் விளைவாக மராட்டிய கவர்னர் திரு அலெக்சாண்டர் அவர்கள் மரத்வாடா பல்கலைகழகத்திற்கு டாக்டர் அம்பேத்கார் பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்த்தை பெற்றுத் தந்தவர் கலைஞர்.
7.தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளம் பெறவேண்டி வடசென்னையில்  சத்தியவாணி முத்து அம்மையார் தொகுதியில் டாக்டர் அம்பேத்கார் அரசு கல்லூரியினை உருவாக்கினார்.
கலப்புத் திருமண தேவை
8.பேதியும்,பீதியும் நம் சேரிக்கு விடுத்தது சாதியல்லவா?
போதிமரத்து புத்தன் புலம்பியதும்,ஆதி மகனாம் வள்ளுவன்
அலறியதும் சாதி ஒழிய வேண்டுமென்றுதானே! என்று 1940களிலேயே உருக்கமிகு உரையாடல் எழுதிய கலைஞர்,தான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் கலப்புத் திருமணம் செய்துக் கொள்பவருக்கு அரசு மூலம் முன்னுரிமை கொடுத்து கல்வி,வீடு,அரசு பணி முதலியவைகளில் அமரவைத்த பெருமை கலைஞரையே சாரும்.
உயர்நீதிமன்ற நீதிபதி
9.மிக உயர்ந்த பதவியான உயர்நீதிமன்ற நீதிபதியாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த திரு.வரதராஜன் அவர்களை நியமிக்க வைத்த பெருமை கலைஞருக்கே.
10.தமிழ்நாடு  குடிசை மாற்று வாரியம் கலைஞரால் முதன் முதலாக  ஆரம்பிக்கப்பட்டு அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன் பெற ஏதுவாக வழிவகை செய்தவர் கலைஞர்.
இட ஒதுக்கீடு
11. மென்மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி வேலைவாய்ப்பில்  முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் 18% உதவித் தொகையிலிருந்து 19%ஆக உயர்த்தியவர் கலைஞர். 
12.ஆதிதிராவிடர்களுக்கும் கோயிலுக்குள் சென்று ஆலய வழிபாடு செய்யவும் ஏன்?அர்ச்சகர் ஆகவும் சட்டமே கொண்டுவந்தவர் கலைஞர்.
13.இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதிதிராவிடர்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டி தந்த கலங்கரை விளக்கம் கலைஞர்.
14.திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு சுந்தரலிங்கனார் பெயர் சூட்டி அழகு பார்த்தவர் கலைஞர்.
15.ஆண்டு தோறும் டாக்டர் அம்பேத்கார் பெயரில் ரூபாய் 1 லட்சம் விருது வழங்கி கௌரவப் படுத்திவைத்தவர் கலைஞர்.
சமத்துவர குடியிருப்பு
16.விவேகம் என்னும் வெள்ளி முளைத்து சாதி,மத,பித்து எனும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் எனும் ஞாயிறு பிறக்கும்என்ற உயர்ந்த நோக்கில் சமத்துவபுரங்களை உருவாக்கி பெரியார் சமத்துவபுர குடியிருப்புகளில் 40%சதவீதம் வீடுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கே ஒதுக்கீடு செய்தவர் கலைஞர்.
17 .கர்மவீரர் காமராசர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த மறைந்த மாண்புமிகு.திரு கக்கன் அவர்களின் மகன் திரு.கே.நடராசமூர்த்தி என்பவர் 18 ஆண்டுகள் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்து அவருக்கும் திரு.கக்கன் அவர்களின் மற்ற வாரிசுகளான திரு.கண்ணன் திரு.பாக்கியநாதன் ஆகியவர்களுக்கும் வாழ்வில் வளம் பெற  எண்ணி தலா ரூ.1 லட்சம் வழங்கியதோடு கைசெலவுக்கு (தந்தையின் ஸ்தானத்தில்) ரூ.25,000 /யும் வழங்கி நம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எல்லாம் தந்தை ஸ்தானத்தில் செயல்பட்டு வருகிறார்.இவைகளை மறக்கமுடியுமா?
18.1997இல் சமத்துவபுர குடியிருப்புகளில் 145 தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த மக்களுக்கு இலவசமாக குடியிருப்புகளை ஒதுக்கித்தந்தவர் கலைஞர்.
இலவச நிலம்
19.1960ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு 1970 இல் முதல் அமைச்சராக வீற்றிருந்து கலைஞர் அவர்கள் 1,78,880 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி 61,985 ஆதிதிராவிட மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தவர் கலைஞர்.இதற்க்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம்.
வீட்டு மனைப்பட்டா
20 .1989-90 இல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும்  சிறப்பு முகாம் அமைத்து நம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 1,52,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய பெருமை  கலைஞரையே சாரும்.
21 .1996 முதல் 2001 வரை முதலைமைச்சராக வீற்றிருந்த கலைஞர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா கூட இல்லையே என கருதி 3,45,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அழகு பார்த்தவர் நமது கலைஞர் அவர்கள்.
22 .இலவச வீட்டுமனை பட்டாக்களை மட்டும் கொடுத்தால் போதுமா?அவர்களுக்கு வீடுகட்டி அதிலே குடியிருக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் 1996 முதல் 2001 வரை ஐந்தாண்டு காலத்தில் 2,96,000 கான்க்ரீட் வீடுகளை ரூ.631 கோடியில் கட்டி குடி அமைத்து தந்தவர் கலைஞர்.
மேலும் நமது கலைஞர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி,வேலைவாய்ப்பு,சுய தொழில் ஆகியவைகளில் தேர்வு பெற்று பொருளாதாரத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்ற லட்சிய நோக்கில் இன்று  தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல வழிவகைகள் உருவாக்கி கொடுத்துள்ளார் அவைகளில் சில:
1 .தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள கோயில்களை  பழுது பார்க்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துகொடுத்தவர் கலைஞர்.
2 .இந்த ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மாணவ,மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்போருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.400 /-லிருந்து ரூ.500/-ஆக உயர்த்தி ஆணையிட்டுள்ளார்.
 3.இந்திரா நினைவு வீடுகட்ட ரூ.55,000/-ஆக உயர்த்தி தரமான வீடுகள் கட்ட ஆணை பிறப்பித்தவர் கலைஞர்.
4.ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுத்து விவசாயம் செய்ய ஏதுவாக 1000 பேருக்கு மின் இணைப்பு பெற உத்தரவு தந்தவர் கலைஞர்.
5.ஆதிதிராவிடர்கள் சுயமாக தொழில்புரிய தாட்கோ மூலம் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார் கலைஞர்.
6.ஆதிதிராவிடர்கள் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கும் பட்சத்தில் மத்திய அரசு நிதியுடன் மாநில அரசும் நிதி கொடுக்க ஆணை பிறப்பித்தவர் நமது கலைஞர்.
7.மருத்துவம்,பொறியியல் போன்ற மேல்படிப்பு படிப்பவர்களுக்கு இதர செலவினம் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என அறிவித்தவர்தான் கலைஞர்.
8.ஆதிதிராவிடர் தெருக்களில் 2008-09 ஆம் ஆண்டில் மட்டும் 10 சமுதாய கூடம் 100 லட்சம் செலவில் கட்டுவதற்கு ஆணை இட்டவர் கலைஞர்.
9.ஆதிதிராவிட மாணவர்கள் கடல் சார்ந்த வேலைவாய்ப்பு பெற வேண்டி 100 நபர்களுக்கு அனுமதி தந்துள்ளார் கலைஞர்.
10.பிளம்பர்,வெல்டிங்,மரவேலை,ஓட்டுனர்,கம்ப்யூட்டர் கற்று தருதல் ஆகியவைகளையும் ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்றுத்தர ஆணையிட்டவர் கலைஞர்.
11.ஆதிதிராவிட மாணவ,மாணவிகளுக்கும் பட்டய கணக்கர் செலவு கணக்கர் பயிற்சி இலவசமாக அளிக்க ஆணை தந்தவர் கலைஞர்.
12.ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 500 நபர்களுக்கு ரூ.75 .00 லட்சம் செலவில் திருப்பூரில் பின்னலாடை பயிற்சி அளிக்கப்பட ஆணையிட்டவர் கலைஞர்.(உரைவிடத்துடன் கூடிய பயிற்சி)
13.விமான பணி பயிற்சி,விமான பணியாளர் பயிற்சி 50 ஆண்,மற்றும் 50 பெண்களுக்கு ரூ.100 லட்சம் செலவில் பயிற்றுவிக்க ஆணை இட்டவர் கலைஞர்.
14.மருத்துவ பரிமாற்றம்,செவிலியர் பட்டய பயிற்சி,கல்வியில் பட்டய பயிற்சிக்காக ஆதிதிராவிட மாணவ,மாணவிகளுக்கு சலுகைகள் வழங்க ஆணையிட்டுள்ளார் கலைஞர்.
15.கலைஞரின் தயவால் ஆதிதிராவிட நலத்துறையில் காலியாக இருந்த 963 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
16.தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு உதவி செவிலியர் பயிற்சி அளிக்க வேண்டி 400 நபர்களுக்கு ரூ.77.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார் கலைஞர்.
17.தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த 500 நபர்களுக்கு கனரக ஓட்டுனர் மற்றும் ஜெ.சி.பி.இயக்கி கற்றுகொள்ளும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கி ஆணையிட்டவர் கலைஞர்.
18.மிகப்பெரிய அளவில்10,000 ஆதிதிராவிடர்,பழங்குடியின வகுப்பினர் பயன்பெற வேண்டு தேசிய நிறுவனங்களான சி.ஐ.பி.இ.டி. மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க,ஆயத்த ஆடை தயாரிக்க ரூ.160 லட்சம் ஒதுக்கி பயிற்சி அளிக்க உத்தரவு வழங்கியுள்ளார்.
19.தாழ்த்தப்பட்ட குடும்பத்தில்  பிறந்தவனும் விமானி ஆக வேண்டும்,எனக் கருதிய கலைஞர் அவர்கள் முதன் முதலாக 10..நபர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டி ரூ.100 லட்சம் ஒதுக்கீடு செய்தவர் கலைஞர்.
20.கிராமப்புற ஆதிதிராவிடர்,பழங்குடியினர் இளைஞர்களும் ஆங்கிலத்தில் பேசும் திறமையை வளர்க்க ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கி பயிலும் 100 இளைஞர்களுக்கு ரூ.30 லட்சம் செலவில் ஆங்கில  பேச்சாற்றல் பயிற்சிக்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
21.விவசாயிகளுக்கும்,விவசாய கடன்களை  பெற்றவர்களுக்கு மட்டுமே கலைஞர் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டாரே என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்காத பட்சத்தில் யாரும் கேட்காத சூழலில் கூட ஒரே அடியாக தாட்கோ மூலம் கடன் பெற்ற ஆதிதிராவிடர்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் தள்ளுபடி செய்து தாழ்த்தப்பட்ட மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது கலைஞர் அரசு.
28 .ஆதிதிராவிட மாணவ,மாணவிகளின் நலன் கருதி 2006 -07 ம் ஆண்டில் ரூ.13,61,95,000/-செலவில் 65,609  மிதிவண்டிகளை கலைஞர் அவர்கள் வழங்கினார். 2007 -08 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் மாணவிகளுக்கு அதாவது 71042 பேருக்கு ரூ.1502 .79 லட்சம் செலவிலும்,63132  மாணவர்களுக்கு ரூ.1397 .35 லட்சம் செலவிலும் மிதிவண்டிகளை வழங்கி தாழ்த்தப்பட்ட இனத்தை  வாழ்வாங்கு வாழச் செய்கிறவர் கலைஞர்.
29.ஆதிதிராவிட மாணவ,மாணவிகளிடையே பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் 2006 -07 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்புவரை பள்ளிகளில்  வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணம் (Tution Fees)  அறவே நீக்கியதன் காரணத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களில் சுமார் 10,73,199 பேர் பயனடைந்துள்ளனர்.

இன்னும் இன்னும் அடுக்கிகொண்டே போகலாம்,தாழ்த்தப்பட்டவர்களுக்கு கலைஞர் அரசு கொடுத்த  சலுகைகளையும்,அவர்கள் வாழ்வில் முன்னேறவேண்டும் என்ற அக்கறை கலந்த பாசத்தையும் பரிவையும்.இதுபோன்ற எந்த ஒரு நலதிட்டங்களையாவது ஜெயலலிதாவால் சொல்ல முடியுமா?அல்லது செய்யதான் முடியுமா? முன்னாள் மத்திய அமைச்சர் திரு.அருணாசலம் அவர்களை தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக தான் செல்லும் விமானத்தில் ஏறக்கூடாது என்று ஜாதியை காரணம் காட்டி அவமானப் படுத்திய ஒரு சம்பவம் போதுமே,தாழ்த்தப்பட்டவர்களின் மேல் ஜெயலலிதாவிற்கு எத்தகைய கரிசனம உண்டு என்பதை! இன்று ஜெயலலிதா ஆற்றி வரும் பொய் பிரச்சாரத்திலிருந்து இவையெல்லாம் மறைக்கப்பட்டாலும் எந்த ஒரு தாழ்த்தப்பட்டவரின் வார்த்தைகளினாலும் மறுக்கப்படாது என்பது மட்டு திண்ணம். ஆகவே ஜெயலலிதாவின் பார்ப்பன வெறி பிடித்த அரசை மீண்டும் மலர ஒரு நாளும் அனுமதிக்கமாட்டோம் என உருதியேர்ப்போமாக!