தென்சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கழக வேட்பாளர்களை ஆதரித்து இன்று ( 14 - 10 - 2011) மாலை திருவான்மியூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பேருரையாற்றுகிறார்.
தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெருவ தறிவோம். இத்தேர்தலில் திராவிட இன மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்திட, நல்வாழ்வு தந்திட கழகம் தனித்தே போட்டியிடும் என தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.
உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் கடந்த கால கழக அரசுகள் மாநிலத்து மக்களுக்கு ஆற்றிய எண்ணிலடங்கா நலப்பணிகளை மக்களிடம் எடுத்து ரைத்து களம் காண்பது என்ற நெஞ்சுரத்துடன் கழகம் இந்த தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு, இத்துணை வயதிலும் தலைவர் கலைஞர் அவர்கள் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேருரையாற்றி வருகிறார்.
உழைப்பிற்கே ஒரு பெரும் உதாரணமாகத் திகழும் உத்தமத் தலைவர்!
உழைப்பின் உன்னதத்தை உணர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள், தமது எழுபதாண்டுகளுக்கும் மேலான நெடிய அரசியல் பொது வாழ்வில் ஓய்வு ஒழிச்சலில்லா உழைப்பினை சிந்தி தம்மையே இந்த இனத்திற்காக அர்பணித்துப் பாடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை திருவெற்றியூர் பெரியார் நகரில் திருவள்ளூர் மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்போல் திரண்டிருந்த மக்களிடையே, கழக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கழக வார்டு வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு ஏறத்தாழ ஒரு மணிநேரம் எழுச்சியுரை நிகழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றுகிறார்கள்.